தமிழ்நாடு

சுகாதார ஆய்வாளர்களுக்கு... கமிஷனர் கடும் எச்சரிக்கை; திருத்தாதீர்...திருந்துவீர்!

Updated : ஆக 20, 2021 | Added : ஆக 20, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாநகராட்சி துாய்மை பணியாளர்களுக்கான வருகை பதிவேட்டில், கையெழுத்து, நேரம் ஆகியவற்றில் திருத்தம் இருப்பதை கண்டுபிடித்த, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால், இது தொடர்பாக, சுகாதார ஆய்வாளர்களை எச்சரித்துள்ளார்.கோவை மாநகராட்சியில், 4,000க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். தினமும் காலை, 5:45க்கு மணிக்கு வார்டு ஆபீசுக்கு வர வேண்டும். வருகை பதிவேட்டில்
சுகாதார ஆய்வாளர்களுக்கு... கமிஷனர் கடும் எச்சரிக்கை; திருத்தாதீர்...திருந்துவீர்!

கோவை:கோவை மாநகராட்சி துாய்மை பணியாளர்களுக்கான வருகை பதிவேட்டில், கையெழுத்து, நேரம் ஆகியவற்றில் திருத்தம் இருப்பதை கண்டுபிடித்த, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால், இது தொடர்பாக, சுகாதார ஆய்வாளர்களை எச்சரித்துள்ளார்.

கோவை மாநகராட்சியில், 4,000க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள் பணிபுரிகின்றனர். தினமும் காலை, 5:45க்கு மணிக்கு வார்டு ஆபீசுக்கு வர வேண்டும். வருகை பதிவேட்டில் கையெழுத்திட்ட பின், ஒவ்வொருவருக்கும் ஏரியா, வேலை பிரித்துக் கொடுக்கப்படும்.சில ஊழியர்கள் கையெழுத்திட்டதும், சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று துாய்மை பணி செய்யாமல், வேறு வேலைகளுக்குச் செல்வதாக, புகார் எழுந்தது.அதனால், வருகைப்பதிவு தொடர்பான தகவல்களை, உடனுக்குடன், மண்டல சுகாதார அலுவலர்களுக்கும், உதவி கமிஷனர்களுக்கும் தெரிவிக்க உத்தரவிடப்பட்டது.

மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால், துணை கமிஷனர் விமல்ராஜ் ஆகியோர், களஆய்வுக்கு வார்டு ஆபீசுக்கு செல்லும்போது, வருகைப்பதிவேட்டை பார்வையிட்டு, தவறுகளை கண்டறிகின்றனர். சில நாட்களில் காலை வருகை நேரம் மட்டும், குறிப்பிடப்பட்டு உள்ளது.பணி முடிந்து, வீட்டுக்குச் செல்லும் நேரம் இருப்பதில்லை. அத்தகைய ஊழியர்கள் முழு நேரம் வேலை செய்தார்களா என்கிற கேள்வி எழுந்திருக்கிறது.சில பதிவேட்டில், 'ஒயிட்னர்' பயன்படுத்தி, வருகை நேரம், பதிவுகள் திருத்தம் செய்யப்பட்டிருக்கிறது. அதனால், சுகாதார ஆய்வாளர்கள் கடுமையாக எச்சரிக்கப்பட்டு உள்ளனர். இனி, இதுபோன்ற தவறுகள் ஏற்பட்டால், 'மெமோ' வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபாலிடம் கேட்டதற்கு, ''ஒவ்வொரு நிறுவனத்திலும் தொழிலாளர் வருகை பதிவேடு கையாளப்படும். பணி துவங்கும் நேரம்; முடியும் நேரம் குறிப்பிடப்படும். சில ஊழியர்கள் பணிக்கு வந்த நேரம் இருக்கிறது; பணி முடிந்து வீட்டுக்குச் சென்ற நேரம் இல்லை. அவர்கள் வேலை செய்தார்களா என்கிற சந்தேகம் எழுகிறது. கையெழுத்து போட்டு விட்டு, வேலை செய்யாமல் சென்று விடுகின்றனர். அதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காண, சுகாதார ஆய்வாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X