கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தமிழக எம்.பி.,க்களுக்கு ஆங்கிலத்தில் பதில் மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

Added : ஆக 20, 2021
Share
Advertisement
மதுரை:'தமிழக எம்.பி.,க்களுக்கு மத்திய அரசு அனுப்பும் கடிதங்களில் ஆங்கிலம் இடம்பெற வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.பொதுநல மனுமார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி., வெங்கடேசன் 2020ல் தாக்கல் செய்த பொதுநல மனு: மத்திய ரிசர்வ் போலீஸ் படை - சி.ஆர்.பி.எப்., பணியிடங்களுக்கு, 2020 டிச., 20ல் எழுத்து தேர்வு நடத்த, அறிவிப்பு வெளியானது.தேர்வு மையங்கள்

மதுரை:'தமிழக எம்.பி.,க்களுக்கு மத்திய அரசு அனுப்பும் கடிதங்களில் ஆங்கிலம் இடம்பெற வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

பொதுநல மனுமார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மதுரை எம்.பி., வெங்கடேசன் 2020ல் தாக்கல் செய்த பொதுநல மனு: மத்திய ரிசர்வ் போலீஸ் படை - சி.ஆர்.பி.எப்., பணியிடங்களுக்கு, 2020 டிச., 20ல் எழுத்து தேர்வு நடத்த, அறிவிப்பு வெளியானது.தேர்வு மையங்கள் வடமாநிலங்களில் ஐந்து, தென் மாநிலங்களில் இரண்டு, நாட்டின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தலா ஒன்று என அமைந்துஉள்ளன.

தமிழகம், புதுச்சேரியில் மையம் இல்லை. தமிழகம், புதுச்சேரியின் நலன் கருதி ஒரு மையம் அமைக்க மத்திய உள்துறை அமைச்சகம், சி.ஆர்.பி.எப்., பொது இயக்குனருக்கு கடிதம் எழுதினேன்.மத்திய உள்துறை இணை அமைச்சகத்தில் இருந்து வந்த பதில் கடிதம் ஹிந்தியில் இருந்ததால், அதன் உள்ளடக்கத்தை அறிய இயலவில்லை.

ஹிந்தியில் பதில் அளித்த தன் வாயிலாக, சட்டம் மற்றும் நடைமுறைகள் மீறப்பட்டுள்ளன. தமிழக அரசு, மக்கள், தமிழக எம்.பி.,க்களுக்கு மத்திய அரசு அனுப்பும் கடிதங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும். நடைமுறைகளை மீறும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.


தகவல் தொடர்பு

நீதிபதிகள் என்.கிருபாகரன், எம்.துரைசுவாமி உத்தரவு:மாநிலங்கள் மொழிவாரியாக பிரிக்கப்பட்டுள்ளன. மொழியின் முக்கியத்துவத்தை குறைத்து மதிப்பிட முடியாது.அலுவல் மொழி சட்டப்படி, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தகவல் தொடர்பிற்கு மொழி முக்கியமானது.அங்கீகரிக்கப்பட்ட மொழியில் தகவல் கோர, மக்களுக்கு உரிமை உள்ளது. எந்த மொழியில் தகவல் கோரப்படுகிறதோ அதே மொழியில் பதில் தர வேண்டியது மத்திய அரசின் கடமை.


அலுவல் மொழி

சட்டத்தை முறையாக பின்பற்றி, எதிர்காலத்தில் மத்திய அரசு மற்றும் அதன் நிறுவனங்கள் ஆங்கிலத்தில் பதில் அளிக்க வேண்டும்.எதிர்காலத்தில் இதுபோல் தவறு நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மனுதாரரின் கோரிக்கை ஏற்கப்படுகிறது.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X