பொது செய்தி

தமிழ்நாடு

தீவன தேவை பூர்த்தி செய்ய 50 ஏக்கரில் திட்ட செயலாக்கம்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாவட்டத்தில் கால்நடை தீவன தேவையை பூர்த்தி, 50 ஏக்கரில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.மேய்ச்சல் நிலங்களை புனரமைப்பு செய்து, தீவன பயிர் சாகுபடி செய்வது குறித்து கால்நடை பராமரிப்பு, ஊரக வளர்ச்சி, வருவாய், வேளாண் பொறியியல், வனத்துறை, கால்நடை அறிவியல் பல்கலை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம், நேற்று நடந்தது.கூட்டத்தில் கலெக்டர் சமீரன்

கோவை:கோவை மாவட்டத்தில் கால்நடை தீவன தேவையை பூர்த்தி, 50 ஏக்கரில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.மேய்ச்சல் நிலங்களை புனரமைப்பு செய்து, தீவன பயிர் சாகுபடி செய்வது குறித்து கால்நடை பராமரிப்பு, ஊரக வளர்ச்சி, வருவாய், வேளாண் பொறியியல், வனத்துறை, கால்நடை அறிவியல் பல்கலை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்பு கூட்டம், நேற்று நடந்தது.கூட்டத்தில் கலெக்டர் சமீரன் பேசியதாவது:மேய்ச்சல் நிலங்களை புனரமைப்பு செய்வது தொடர்பான திட்ட செயலாக்கம் நடந்து வருகிறது. மாவட்டத்தில் இதற்கென 50 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம், கால்நடைளுக்கு தீவனம் கிடைப்பதை கணிசமாக அதிகரிக்க முடியும். தீவன அபிவிருத்தி திட்டத்தில், இந்த பணியை மேற்கொள்ள முடியும். இதன் மூலம், பசுந்தீவன தட்டுப்பாடு இல்லாத மாவட்டமாக, கோவையை மாற்ற முடியும்.இவ்வாறு, கலெக்டர் பேசினார்.டி.ஆர்.ஓ., லீலா அலெக்ஸ், கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ராகவன் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X