பொது செய்தி

தமிழ்நாடு

கேரளாவில் ஓணம் பண்டிகை: கோவை மார்க்கெட் சுறுசுறுப்பு

Added : ஆக 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை;ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள சூழலில், கோவையில் காய்கறி மற்றும் மளிகை மார்க்கெட், நேற்று சுறுசுறுப்படைந்தது.ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதனால் கோவையிலும், கோவை மாவட்டத்திலுள்ள தமிழக கேரள எல்லைப்பகுதி கிராமங்களிலும், ஓணம் பண்டிகை களை கட்டியுள்ளது.கோவை ரங்கேகவுடர் மற்றும் பெரியகடை வீதியிலுள்ள, மளிகை மற்றும் காய்கறி மார்க்கெட்டில் நேற்று
 கேரளாவில் ஓணம் பண்டிகை:  கோவை மார்க்கெட் சுறுசுறுப்பு

கோவை;ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள சூழலில், கோவையில் காய்கறி மற்றும் மளிகை மார்க்கெட், நேற்று சுறுசுறுப்படைந்தது.ஓணம் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது. இதனால் கோவையிலும், கோவை மாவட்டத்திலுள்ள தமிழக கேரள எல்லைப்பகுதி கிராமங்களிலும், ஓணம் பண்டிகை களை கட்டியுள்ளது.கோவை ரங்கேகவுடர் மற்றும் பெரியகடை வீதியிலுள்ள, மளிகை மற்றும் காய்கறி மார்க்கெட்டில் நேற்று வியாபாரம் சூடுபிடித்தது. கோவையிலிருந்து கேரளா மற்றும் தமிழக எல்லையிலுள்ள கிராமப்பகுதிகளுக்கு மளிகைப்பொருட்கள் லாரிகளில், அடிப்படையில் கொண்டு செல்லப்பட்டது.அதே போல்ஓணம் பண்டிகைக்கு தேவையான சேனை, கருணை, பீன்ஸ், கேரட், கொத்தவரை, பூசணி, அரசாணி, முருங்கை, அவரை, வாழைக்காய் உள்ளிட்ட காய்கறி ஏராளமாக கொண்டு செல்லப்பட்டது.டி.கே.மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத்தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், ''வழக்கமாக அன்றாடம் கேரளாவுக்கு, காய்கறி விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். தற்போது ஓணம் பண்டிகையையொட்டி, தேவையான அளவு காய்கறி, கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. வியாபாரம் தற்போது பிசியாக இருப்பதால், வியாபாரிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஆக-202110:48:54 IST Report Abuse
Ram Pollachi வரலெட்சு விரதத்தை முன்னிட்டு ஒரு முலம் மல்லிகை பூ நூறு ரூபாய்..... உண்டு மகிழ்வோம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X