பொது செய்தி

தமிழ்நாடு

96 சதவீதம் ஊழியர்களுக்கு தடுப்பூசி: 'எக்ஸ்பிரஸ் வேகத்தில்' சேலம் ரயில்வே கோட்டம்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
கோவை;சேலம் ரயில்வே கோட்டத்தில் இதுவரை, 130 முகாம்கள் வாயிலாக, 96 சதவீதம் ஊழியர்களுக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ரயில்கள், ஸ்டேஷன் வளாகங்களில் எச்சில் துப்புவது, 'மாஸ்க்' அணியாது பயணிப்பது போன்றவற்றுக்கு, 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. அதேபோல், கொரோனா தடுப்பு பேராயுதமான தடுப்பூசி முகாம்கள் வாயிலாக, ரயில்வே

கோவை;சேலம் ரயில்வே கோட்டத்தில் இதுவரை, 130 முகாம்கள் வாயிலாக, 96 சதவீதம் ஊழியர்களுக்கு, கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ரயில்கள், ஸ்டேஷன் வளாகங்களில் எச்சில் துப்புவது, 'மாஸ்க்' அணியாது பயணிப்பது போன்றவற்றுக்கு, 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. அதேபோல், கொரோனா தடுப்பு பேராயுதமான தடுப்பூசி முகாம்கள் வாயிலாக, ரயில்வே ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.சேலம் ரயில்வே கோட்டத்தில் மட்டும் கோவை, திருப்பூர், மேட்டுப்பாளையம், சேலம் என, 94 ஸ்டேஷன்கள் உள்ளன. தவிர, கோவை ரயில்வே பணிமனை, போத்தனுார் சிக்னல் அண்ட் டெலிகம்யூனிகேசன்(எஸ் அண்ட் டி) பணிமனை என, பல்வேறு பிரிவுகள் உள்ளன.ரயில்வே ஊழியர்கள் சுமார், 8,340 பேர் பணிபுரியும் நிலையில் சமீபகாலமாக, நோய் பரவலை கட்டுப்படுத்த, கொரோனா தடுப்பூசி போடுவது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.கோவை ரயில்வே ஸ்டேஷனில், தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, 100க்கும் மேற்பட்டோருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அந்த வகையில், சேலம் ரயில்வே கோட்டம் முழுவதும் இதுவரை, 130 முகாம்கள் வாயிலாக, 96 சதவீதம் பேருக்கு(8,000 பேருக்கு) தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.மீதமுள்ள பணியாளர்களுக்கும், விரைவில் தடுப்பூசி செலுத்தப்படும் என, சேலம் ரயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X