தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆசிரியர்கள் யார், யார்?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தடுப்பூசி செலுத்திக்கொண்ட ஆசிரியர்கள் யார், யார்?

Added : ஆக 20, 2021
Share
கோவை;பள்ளிகள் அடுத்த மாதம் திறக்கப்படவுள்ள நிலையில், ஆசிரியர்கள் நுாறு சதவீதம் தடுப்பூசி போட்டுள்ளனரா என்பதை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, அடுத்த மாதம் பள்ளிகள் திறக்க ஆயத்த பணிகள் நடக்கின்றன.வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதால், பள்ளிகளில் அடிப்படை வசதிகளின் நிலை குறித்து ஆய்வு செய்ய, முதன்மை

கோவை;பள்ளிகள் அடுத்த மாதம் திறக்கப்படவுள்ள நிலையில், ஆசிரியர்கள் நுாறு சதவீதம் தடுப்பூசி போட்டுள்ளனரா என்பதை உறுதி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், ஒன்பது முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, அடுத்த மாதம் பள்ளிகள் திறக்க ஆயத்த பணிகள் நடக்கின்றன.வழிகாட்டி நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளதால், பள்ளிகளில் அடிப்படை வசதிகளின் நிலை குறித்து ஆய்வு செய்ய, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மூன்றாவது அலை பரவ வாய்ப்புள்ள நிலையில், பள்ளிகள் திறக்கப்படுவதால், ஆசிரியர்கள் நுாறு சதவீதம் தடுப்பூசி போட்டுள்ளனரா என்பதை, உறுதி செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி வகுப்பறைகள், ஆய்வகங்களை கற்பித்தல் பணிகள் துவங்குவதற்கு ஏற்ப, ஆயத்த நிலையில் வைத்திருக்க வேண்டும்.கழிவறை, குடிநீர் தொட்டி சுத்தம் செய்திருப்பதோடு, கிருமிநாசினி தெளித்து, வளாகங்களை சுகாதாரமாக பராமரிக்குமாறு, தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதோடு, பள்ளிகளில் உள்ள மொத்த ஆசிரியர்கள், தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள், தடுப்பூசி போட்டு கொள்ளாததற்கான மருத்துவக்காரணங்கள் குறித்து, அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X