கோர்ட் செய்தி

தமிழ்நாடு

உள் ஒதுக்கீடு சலுகை கோரிய மனு தள்ளுபடி

Added : ஆக 20, 2021
Share
Advertisement
மதுரை:மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடு சலுகையை, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் நீட்டிக்க கோரிய வழக்கை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான கமிஷன், '2019 - 20 நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள், 1.56 லட்சம் பேர் பங்கேற்றனர். இவர்களில் ஆறு பேர் மட்டுமே எம்.பி.பி.எஸ்., சீட் பெற முடிந்தது. இது 0.1 சதவீதம் தான்'

மதுரை:மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடு சலுகையை, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் நீட்டிக்க கோரிய வழக்கை, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது.
ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான கமிஷன், '2019 - 20 நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்கள், 1.56 லட்சம் பேர் பங்கேற்றனர். இவர்களில் ஆறு பேர் மட்டுமே எம்.பி.பி.எஸ்., சீட் பெற முடிந்தது. இது 0.1 சதவீதம் தான்' என தமிழக அரசிடம் அறிக்கை சமர்ப்பித்தது.

இதையடுத்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம், தமிழக சட்டசபையில் 2020 செப்., 15ல் நிறைவேற்றப்பட்டது. சில மாணவர்கள், 'அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், ஏழை மாணவர்கள் படிக்கின்றனர். முன்னுரிமை அடிப்படையில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற அவர்களுக்கும் உரிமை உண்டு.

'அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்க வேண்டும். உள்ஒதுக்கீடு சலுகையை அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும் நீட்டிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என 2020ல் மனு செய்தனர்.விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X