போலீஸ் டைரி: மது விற்றவர்கள் கைது

Added : ஆக 20, 2021
Share
Advertisement
மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மற்றும் மாநகர போலீசார், நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் சோதனையிட்டனர். அப்போது சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்த, ஏழு பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, 200க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மனைவியை தாக்கிய கணவர் கைதுஉக்கடம், சி.எம்.சி., காலனியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 35; கூலி தொழிலாளி. இவரது மனைவி

மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் மற்றும் மாநகர போலீசார், நேற்று முன்தினம் பல்வேறு இடங்களில் சோதனையிட்டனர். அப்போது சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டிருந்த, ஏழு பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து, 200க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மனைவியை தாக்கிய கணவர் கைது

உக்கடம், சி.எம்.சி., காலனியை சேர்ந்தவர் ராஜேஷ்குமார், 35; கூலி தொழிலாளி. இவரது மனைவி சாந்தி, 25. குடிப்பழக்கத்துக்கு அடிமையான தொழிலாளி, தினமும் மது அருந்தி வந்தார். மனவேதனையடைந்த மனைவி, அருகே உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று முன்தினம் அங்கு சென்ற தொழிலாளி, மது அருந்த பணம் கேட்டு மனைவியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின்பேரில் உக்கடம் போலீசார், வழக்கு பதிவு செய்து ராஜேஷ்குமாரை கைது செய்தனர்.

பான்மசாலா விற்றவர்கள் கைது

ஆர்.எஸ்.புரம் மற்றும் செல்வபுரம் போலீசார், நேற்று முன்தினம் தங்கள் பகுதிகளிலுள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். இதில், தடை செய்யப்பட்ட பான்மசாலா பொருட்களை விற்பனை செய்த, தெப்பக்குளம் பகுதியை சேர்ந்த அஜீத், 25, அபி, 23, தெலுங்குபாளையத்தை சேர்ந்த சுகுமார், 46, சபீர், 33, அரவிந்த், 27, செல்வபுரத்தை சேர்ந்த காளிதாஸ், 49 ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து, ஹான்ஸ் உள்ளிட்ட, 200க்கும் மேற்பட்ட பான்மசாலா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X