பொது செய்தி

தமிழ்நாடு

மேலும் 15 கோடி ரூபாய் டெண்டர் ரத்து! தொடரும் மாநகராட்சி கமிஷனரின் அதிரடி

Added : ஆக 20, 2021
Share
Advertisement
கோவை:கோவை மாநகராட்சியில், மேலும், 15 கோடி ரூபாய் மதிப்பிலான 'டெண்டர்'கள் ரத்து செய்யப்பட்டன.கோவை மாநகராட்சியில், கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், சட்டசபை தேர்தலுக்கு முன், அவசர அவசரமாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ரோடு போடுவது, மழை நீர் வடிகால் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்கு 'டெண்டர்' கோரப்பட்டு உள்ளன.பல இடங்களில் தார் ரோடுகள் தரமின்றி செய்யப்பட்டன.

கோவை:கோவை மாநகராட்சியில், மேலும், 15 கோடி ரூபாய் மதிப்பிலான 'டெண்டர்'கள் ரத்து செய்யப்பட்டன.கோவை மாநகராட்சியில், கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், சட்டசபை தேர்தலுக்கு முன், அவசர அவசரமாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ரோடு போடுவது, மழை நீர் வடிகால் கட்டுவது உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்கு 'டெண்டர்' கோரப்பட்டு உள்ளன.பல இடங்களில் தார் ரோடுகள் தரமின்றி செய்யப்பட்டன. பழைய ரோட்டை தோண்டி எடுக்காமல், ஒரே ஒரு லேயர் மட்டும் தார் ரோடு போடப்பட்டது. இவ்வகையில், மாநகராட்சி நிதி வீணடிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு பல்வேறு பணிகள் தரமின்றி செய்யப்பட்டு, பணம் கேட்டு, மாநகராட்சிக்கு 'பில்' வைக்கப்பட்டு உள்ளன. அவ்வகையில், ஒப்பந்ததாரர்களுக்கு, 120 கோடி ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கிறது. இச்சூழலில், மேலும் பல கோடி ரூபாய்க்கு பணிகள் செய்வதற்கு, 'டெண்டர்' விடப்பட்டு, நிலுவையில் இருப்பது, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் கவனத்துக்கு வந்தது. மண்டலம் மற்றும் வார்டு வாரியாக பட்டியல் தயாரித்து, 98 கோடி ரூபாய் மதிப்பிலான, 396 பணிகளை, ரத்து செய்து உத்தரவிட்டார்.தற்போது மாநகராட்சி நிதி நிலைமை படுமோசமாக இருக்கிறது. ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத அளவுக்கு நெருக்கடி ஏற்படுகிறது. வரியினங்கள் வசூலிக்க, பொதுமக்கள் மீது அழுத்தம் கொடுக்க இயலாத நிலையும் அதிகாரிகளுக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால், மேலும், 15 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளை, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் ரத்து செய்து, உத்தரவிட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X