பொது செய்தி

தமிழ்நாடு

சிண்டிகேட் குழுவில் 7 உறுப்பினர் பதவி காலி

Added : ஆக 20, 2021
Share
Advertisement
கோவை;பாரதியார் பல்கலையின் சிண்டிகேட் குழுவில், 7 உறுப்பினர்கள் பதவி,தொடர்ந்து காலியாக இருப்பதாக, அதிருப்தி எழுந்துள்ளது.பல்கலைகளில்சிண்டிகேட் குழுவில் கவர்னர் நாமினி, அரசு நாமினி, கல்லுாரி கல்வி, சட்டம், பள்ளிக்கல்வித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையின் இயக்குனர்கள், பல்கலை துணைவேந்தர், தேர்வு செய்யப்பட்ட பேராசிரியர்கள், கல்லுாரி முதல்வர்கள், என சுமார்,

கோவை;பாரதியார் பல்கலையின் சிண்டிகேட் குழுவில், 7 உறுப்பினர்கள் பதவி,தொடர்ந்து காலியாக இருப்பதாக, அதிருப்தி எழுந்துள்ளது.பல்கலைகளில்சிண்டிகேட் குழுவில் கவர்னர் நாமினி, அரசு நாமினி, கல்லுாரி கல்வி, சட்டம், பள்ளிக்கல்வித்துறை, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறையின் இயக்குனர்கள், பல்கலை துணைவேந்தர், தேர்வு செய்யப்பட்ட பேராசிரியர்கள், கல்லுாரி முதல்வர்கள், என சுமார், 22 உறுப்பினர்கள் இருப்பர்.அரசு துறை இயக்குனர்கள், கவர்னர் நாமினி, அரசு நாமினி, சமூகத்தில் பிரபலமானவர்கள் போன்றோர், பெரும்பாலும் கூட்டங்களில் பங்கேற்பதில்லை. பல்கலை பேராசிரியர் பிரிவினர், கல்லுாரி முதல்வர் பிரிவினர், ஆசிரியர் மற்றும் பட்டதாரி பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்ட, 13 நபர்களே கூட்டத்தில் பங்கேற்பது வழக்கம்.இந்நிலையில், நீண்ட காலமாக, 7 உறுப்பினர் பதவி தேர்வு செய்யப்படாமல் காலியாகவே உள்ளன. இதனால், பல்கலை நிர்வாக செயல்பாடுகளில், முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளதாக, பேராசிரியர்கள் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து, பல்கலை ஆசிரியர் சங்க உறுப்பினர் ஒருவர் கூறுகையில், 'பல்கலை ஆசிரியர்கள் பிரிவின் கீழ், 5ல் இரண்டும், செனட் பிரிவில் ஒன்று, கல்லுாரி முதல்வர் மற்றும் ஆசிரியர்கள் பிரிவில் தலா 2 உட்பட, 7 உறுப்பினர் பதவிகள் காலியாகவுள்ளன.தற்போது நடக்கும் சிண்டிகேட் கூட்டங்களில், துணைவேந்தர் உட்பட, ஐந்து, ஆறு பேர் மட்டுமே பங்கேற்கும் நிலை உள்ளது. சிண்டிகேட் காலியிடங்களை நிரப்ப, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.கொரோனா காரணமாக காலியிடங்கள் நிரப்பும் செயல்பாடுகளில் தாமதம் ஏற்பட்டதாகவும், உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பல்கலை நிர்வாகம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X