பொது செய்தி

தமிழ்நாடு

28.30 லட்சம் டன் சரக்கு போக்குவரத்து

Added : ஆக 20, 2021
Share
Advertisement
கோவை:கொரோனா சமயத்தில் சரக்கு ரயில்கள் வாயிலாக, 28.30 லட்சம் டன் சரக்குகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.கொரோனா முதல், இரண்டாவது அலை சமயத்தில் பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்பட்டாலும், அத்தியாவசிய போக்குவரத்துக்கான, சரக்கு ரயில்கள் மட்டும் நாடு முழுவதும் இயக்கப்பட்டன. அந்த வகையில், சேலம் ரயில்வே கோட்டத்தில் இருந்து காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், வடமாநிலங்களுக்கு

கோவை:கொரோனா சமயத்தில் சரக்கு ரயில்கள் வாயிலாக, 28.30 லட்சம் டன் சரக்குகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.கொரோனா முதல், இரண்டாவது அலை சமயத்தில் பயணிகள் ரயில் சேவை நிறுத்தப்பட்டாலும், அத்தியாவசிய போக்குவரத்துக்கான, சரக்கு ரயில்கள் மட்டும் நாடு முழுவதும் இயக்கப்பட்டன. அந்த வகையில், சேலம் ரயில்வே கோட்டத்தில் இருந்து காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், வடமாநிலங்களுக்கு அதிகம் அனுப்பிவைக்கப்பட்டன.சரக்கு ரயில் சேவையை ஊக்குவிக்கும் விதமாக தொழில் துறையினருடன் கலந்துரையாடுதல், கோரிக்கையை நிறைவேற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.இதுவரை, பல்வேறு பகுதிகளுக்கு, சேலம் கோட்டத்தில் இருந்து, 28.30 லட்சம் டன்கள் சரக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, 14.7 சதவீதம் கடந்தாண்டு வருவாய் கிடைத்துள்ளதாக, சேலம் கோட்ட ரயில்வே அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X