கோர்ட் செய்தி

தமிழ்நாடு

தரமற்ற குடியிருப்புகள்: பெரம்பலுாரிலும் சர்ச்சை

Added : ஆக 20, 2021
Share
Advertisement
பெரம்பலுார்:சென்னையை போல, பெரம்பலுாரிலும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகள் தரமற்று இருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து, அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், பெரம்பலுார் மாவட்டம், கவுல்பாளையம் கிராமத்தில், 41.02 கோடி ரூபாயில், 504 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. 2018ல் துவங்கிய கட்டுமானப் பணி,

பெரம்பலுார்:சென்னையை போல, பெரம்பலுாரிலும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகள் தரமற்று இருப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்து, அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

தமிழ்நாடு குடிசை மாற்று வாரியம் சார்பில், பெரம்பலுார் மாவட்டம், கவுல்பாளையம் கிராமத்தில், 41.02 கோடி ரூபாயில், 504 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. 2018ல் துவங்கிய கட்டுமானப் பணி, சமீபத்தில் முடிந்தது.பெரம்பலுார் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் வீடில்லா ஏழைகளுக்கு ஒதுக்கப்பட்டன. பயனாளிகளிடம் தலா, 1.64 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டது.

104 பேர் குடியேறி உள்ளனர். மற்ற வீடுகளிலும் பயனாளிகள் விரைவில் குடியேற உள்ளனர். சென்னை புளியந்தோப்பில் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில் சுவர்களின் பூச்சு பெயர்ந்து விழுவதாக புகார் எழுந்தது. அதிகாரிகள், அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், 'பெரம்பலுார் மாவட்டம், கவுல்பாளையம் கிராமத்திலும் குடிசை மாற்று வாரிய வீடுகள் தரமில்லாமல் கட்டப்பட்டுள்ளன.'சுவரின் சிமென்ட் பூச்சுகள், சுண்ணாம்புடன் பெயர்ந்து விழுகிறது. மழை பெய்தால் சிமென்ட் பூச்சு கரைகிறது. சுவற்றில் பல இடங்களில் நீண்ட விரிசல் இருக்கிறது' என புகார்கள் எழுந்தன.

, குடிசை மாற்று வாரிய திருச்சி கோட்ட நிர்வாக பொறியாளர் வசந்தகுமார், மேற்பார்வை பொறியாளர் அழகு பொன்னையா ஆகியோர், நேற்று குடியிருப்புகளை ஆய்வு செய்தனர். 'பழுதுகள் அனைத்தும் சீர் செய்து தரப்படும்' என, பயனாளிகளிடம் உறுதிஅளித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X