பொது செய்தி

தமிழ்நாடு

வேப்பமரத்துக்கு 'இடமாறுதல்' 'பர்லாபிங்' முறையில் மறுவாழ்வு

Added : ஆக 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலை தாவரவியல் பூங்காவின் முன்பகுதியில், நுழைவாயில் அமைப்பதற்காக, முப்பது வயதான வேப்பமரத்தை, 'பர்லாபிங்' முறையில், வேளாண் பல்கலை விஞ்ஞானிகள் மறு நடவு செய்தனர்.தமிழ்நாடு வேளாண் பல்கலை தாவரவியல் பூங்கா நுழைவாயிலில், மிகப்பெரிய முப்பது வயதான வேப்பமரம் இருந்தது. இது பூங்காவிற்கான நுழைவாயில் அமைக்க இடையூறாக இருந்தது.இதையடுத்து, அந்த
 வேப்பமரத்துக்கு 'இடமாறுதல்' 'பர்லாபிங்' முறையில் மறுவாழ்வு

கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலை தாவரவியல் பூங்காவின் முன்பகுதியில், நுழைவாயில் அமைப்பதற்காக, முப்பது வயதான வேப்பமரத்தை, 'பர்லாபிங்' முறையில், வேளாண் பல்கலை விஞ்ஞானிகள் மறு நடவு செய்தனர்.தமிழ்நாடு வேளாண் பல்கலை தாவரவியல் பூங்கா நுழைவாயிலில், மிகப்பெரிய முப்பது வயதான வேப்பமரம் இருந்தது. இது பூங்காவிற்கான நுழைவாயில் அமைக்க இடையூறாக இருந்தது.இதையடுத்து, அந்த வேப்பமரத்தை அப்படியே வேருடன் பெயர்த்து எடுத்து, பூங்காவினுள் வேறு பகுதியில், 'பர்லாபிங்' முறையில் மறுநடவு செய்ய முடிவு செய்யப்பட்டது.இதற்காக, மரத்தின் சிறு சிறு கிளைகள் வெட்டப்பட்டு, தண்டிலிருந்து நீராவிப்போக்கினை தடுக்கும் வகையில் மருந்துகள் தெளிக்கப்பட்டு,அதன் மேல் வைக்கோல் வைத்து தைத்து, சணல் பைகளால் மூடி, தண்ணீர் தெளித்து ஈரப்பதத்துடன், வெட்டுண்ட பகுதிகள் நன்கு கட்டப்பட்டன.ஆணிவேருக்கு பாதிப்பு ஏற்படாமல், பக்கவாட்டு வேர்களை மட்டும் செவ்வனே செதுக்கி, மரத்தின் வேர்ப்பந்தோடு பொக்லைன் இயந்திரம் கொண்டு பெயர்த்து எடுக்கப்பட்டது.பல்கலை தாவரவியல் பூங்காவின் அருகாமையில், நுழைவாயில் அருகிலேயே வெற்றிகரமாக மறு நடவு செய்யப்பட்டது.இந்நிகழ்வு, பல்கலை விஞ்ஞானிகள் மற்றும் வேளாண் கல்லுாரி முதல்வர் கல்யாணசுந்தரம், தோட்டக்கலை கல்லுாரி முதல்வர் புகழேந்தி மற்றும் மலரியல் துறைத்தலைவர் ராஜாமணி ஆகியோர் முன்னிலையில் நடந்தது. கோவை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X