சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியுடன் 5வது திருமணம் 'கல்யாண மன்னன்' கைது

Added : ஆக 20, 2021
Share
Advertisement
தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே, 17 வயது சிறுமியை கடத்தி ஐந்தாவது திருமணம் செய்த, 'கல்யாண மன்னனை' போலீசார் கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த வண்டுவாஞ்சேரியைச் சேர்ந்தவர், 17 வயது சிறுமி; கும்பகோணத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தார்.கடந்த ஜன., 12ல் சிறுமி மாயமானார். அவரது பெற்றோர், நாச்சியார்கோவில் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் தனிப்படை
 சிறுமியுடன் 5வது திருமணம் 'கல்யாண மன்னன்' கைது

தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே, 17 வயது சிறுமியை கடத்தி ஐந்தாவது திருமணம் செய்த, 'கல்யாண மன்னனை' போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அடுத்த வண்டுவாஞ்சேரியைச் சேர்ந்தவர், 17 வயது சிறுமி; கும்பகோணத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்தார்.கடந்த ஜன., 12ல் சிறுமி மாயமானார். அவரது பெற்றோர், நாச்சியார்கோவில் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் தனிப்படை அமைத்து தேடினர். விசாரணையில், அதே நிறுவனத்தில் பணியாற்றிய, மதுரை மாவட்டம், மெகபூபாளையத்தைச் சேர்ந்த சையத் அலி, 40 என்பவர், சிறுமியை கடத்தி சென்றது தெரிந்தது.

கடந்த ஏழு மாதங்களாக தேடி வந்த நிலையில், சையத் அலி ஏ.டி.எம்., மூலம் பணம் பரிவர்த்தனை செய்ததை வைத்து, அவர் கேரள மாநிலத்தில் பதுங்கி இருப்பது தெரிந்தது. போலீசார் அங்கு சென்றனர்.அதற்குள் சையத் அலி, சிறுமியுடன் நாச்சியார்கோவிலுக்கு தப்பி வந்து விட்டார். அங்கு நேற்று முன்தினம் சையத்அலியை போலீசார், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

அவரிடம் நடத்திய விசாரணையில், பெங்களூரில் வேலை செய்யும் போது, ஒரு பெண்ணையும், மதுரையில் இருந்தபோது, ஒரு பெண்ணையும், கும்பகோணத்தில், இரண்டு பெண்களையும் ஏமாற்றி திருமணம் செய்து, நகை மற்றும் பணத்தை சுருட்டியது தெரியவந்தது.தற்போது, ஐந்தாவதாக சிறுமியை கடத்தி சென்று திருமணம் செய்துள்ளார். சையத் அலியிடம் இருந்து மீட்கப்பட்ட சிறுமி, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X