பொது செய்தி

தமிழ்நாடு

ஆப்கன் ராணுவத்தினர் நாடு திரும்புவதில் சிக்கல்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
குன்னுார்:குன்னுார் வெலிங்டன் ராணுவ மையத்தில் பயிற்சி பெற்று வரும், ஆப்கானிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பயிற்சி முடித்து நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரியில், 19 நட்பு நாடுகளைச் சேர்ந்த, 479 அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மூன்று ராணுவ அதிகாரிகள் இங்கு

குன்னுார்:குன்னுார் வெலிங்டன் ராணுவ மையத்தில் பயிற்சி பெற்று வரும், ஆப்கானிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பயிற்சி முடித்து நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னுார் வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரியில், 19 நட்பு நாடுகளைச் சேர்ந்த, 479 அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மூன்று ராணுவ அதிகாரிகள் இங்கு பயிற்சி பெற்று வருகின்றனர். இந்நிலையில், ஆப்கன் தலைநகர் காபூலை தலிபான்கள் கைப்பற்றி, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.அங்கிருந்த பலரும் வெளிநாட்டுக்கு தப்ப முயன்றுள்ளனர்.

துாதரக ஊழியர்கள் உட்பட இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்.இந்நிலையில், இங்கு பயிற்சி பெறும் ஆப்கன் ராணுவ வீரர்கள் பயிற்சி முடித்து, நாடு திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், முப்படை தளபதி பிபின் ராவத் ஆகியோர், வெலிங்டன் ராணுவ பயிற்சி கல்லுாரிக்கு, சில நாட்களில் வந்து, கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளனர். அப்போது, இது தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X