சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் மோதல் கொலை 4 பேர் கைது; மூவர் சரண்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
துாத்துக்குடி:சி.எஸ்.ஐ., டயோசீசன் தேர்தல் மோதலில், ஊராட்சி தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.துாத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே அகரம் ஊராட்சி தலைவர் பொன்சீலன், 45. இவர் மீது மணல் கடத்தல் தகராறில், நண்பரான லெனின் என்பவரை , 2017 அக்., 23ல் கொலை செய்த வழக்கு உள்ளது. ஊராட்சி தேர்தலில், லெனின் மனைவியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.தற்போது,
 தேர்தல் மோதல் கொலை 4 பேர் கைது; மூவர் சரண்

துாத்துக்குடி:சி.எஸ்.ஐ., டயோசீசன் தேர்தல் மோதலில், ஊராட்சி தலைவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

துாத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே அகரம் ஊராட்சி தலைவர் பொன்சீலன், 45. இவர் மீது மணல் கடத்தல் தகராறில், நண்பரான லெனின் என்பவரை , 2017 அக்., 23ல் கொலை செய்த வழக்கு உள்ளது. ஊராட்சி தேர்தலில், லெனின் மனைவியை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார்.தற்போது, துாத்துக்குடி -நாசரேத் டயோசீசன் பெருமன்ற தேர்தலிலும் வெற்றி பெற்றார்.

பொன்சீலனை, ஒரு கும்பல் சரமாரியாக வெட்டி கொலை செய்தது. கொலையில் லெனின் தம்பிகள் ஜெகன், 40, ரூபன் தலைமையில் சிலர் ஈடுபட்டது தெரியவந்தது.அவர்களில் ஜெபசிங், பெனித் நியூட்டன், மாரிமுத்து, ஜெபஸ்டின் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பொன்சீலனிடம் பறித்துச் சென்ற 21 சவரன் நகைகள் மற்றும் அரிவாள்கள், சுமோ கார் பறிமுதல் செய்யப்பட்டன. தேடப்பட்டவர்களில் பாலகிருஷ்ணன், 27, நவநீதன், 27, ரூபன் தேவபிச்சை ஆகியோர், திருச்செந்துார் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். ஜெகன், ரூபன் தலைமறைவாக உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X