பொது செய்தி

தமிழ்நாடு

நிலக்கடலை 'சென்டிமென்ட்'

Added : ஆக 20, 2021
Share
Advertisement
நிலக்கடலை 'சென்டிமென்ட்'சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், திங்கள்தோறும், நிலக்கடலை ஏலம் நடக்கும். திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய இடங்களில் இருந்து விவசாயிகள் நிலக்கடலையை விற்பனைக்காக கொண்டுவருவர். கடந்த வாரம், இந்த சீசனுக்கான நிலக்கடலை வரத்து துவங்கியது. ஏல மையத்தில், 3 பரிவர்த்தனை கூடங்கள் உள்ளன. 'முதல் கூடத்தில் நிலக்கடலை வைத்தால், விரைவில்
 நிலக்கடலை 'சென்டிமென்ட்'

நிலக்கடலை 'சென்டிமென்ட்'சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில், திங்கள்தோறும், நிலக்கடலை ஏலம் நடக்கும். திருப்பூர், ஈரோடு, நீலகிரி ஆகிய இடங்களில் இருந்து விவசாயிகள் நிலக்கடலையை விற்பனைக்காக கொண்டுவருவர். கடந்த வாரம், இந்த சீசனுக்கான நிலக்கடலை வரத்து துவங்கியது. ஏல மையத்தில், 3 பரிவர்த்தனை கூடங்கள் உள்ளன. 'முதல் கூடத்தில் நிலக்கடலை வைத்தால், விரைவில் விற்பனையாகும்; கூடுதல் விலை கிடைக்கும்' என்ற 'சென்டிமென்ட்' விவசாயிகள் மத்தியில் உள்ளது. விவசாயிகள் முதல் கூடத்திலேயே நிலக்கடலை மூட்டையை நிரப்பி விடுகின்றனர். நெருக்கடியை தவிர்க்க மூன்று கூடங்களிலும் இடைவெளி விட்டு, நிலக்கடலை மூட்டையை அடுக்கி வைக்க நிர்வாகத்தினர் முடிவு செய்துள்ளனர். இதற்காக, தரையில் கோடு வரையும் பணிகள் நடந்து வருகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X