குப்பை கொட்டுவதை தடுக்க மரக்கன்றுகள் நடும் ஊராட்சி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குப்பை கொட்டுவதை தடுக்க மரக்கன்றுகள் நடும் ஊராட்சி

Added : ஆக 20, 2021
Share
பல்லடம்:கரைப்புதுார் ஊராட்சியில், 25 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்; பல்லடம் ஒன்றியத்தில், மக்கள் தொகை அதிகமுள்ள ஊராட்சி.இங்கு பல்வேறு பகுதிகளில் குப்பைகள் மலைபோல் குவிகின்றன. தொழிலாளர்கள் நிறைந்த அருள்புரம் பகுதியில், சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகி வருகிறது.பிளாஸ்டிக் குப்பைகள், காய்கறி, இறைச்சி கழிவுகள், பாட்டில்கள் உள்ளிட்டவை சர்வ சாதாரணமாக தெருவோரங்களில்
 குப்பை கொட்டுவதை தடுக்க மரக்கன்றுகள் நடும் ஊராட்சி

பல்லடம்:கரைப்புதுார் ஊராட்சியில், 25 ஆயிரம் பேர் வசிக்கின்றனர்; பல்லடம் ஒன்றியத்தில், மக்கள் தொகை அதிகமுள்ள ஊராட்சி.இங்கு பல்வேறு பகுதிகளில் குப்பைகள் மலைபோல் குவிகின்றன. தொழிலாளர்கள் நிறைந்த அருள்புரம் பகுதியில், சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகி வருகிறது.பிளாஸ்டிக் குப்பைகள், காய்கறி, இறைச்சி கழிவுகள், பாட்டில்கள் உள்ளிட்டவை சர்வ சாதாரணமாக தெருவோரங்களில் வீசப்படுகின்றன.மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், குப்பை கொட்டுவதை தடுக்க ஊராட்சி நிர்வாகம் மரக்கன்றுகளை நட்டு வருகிறது.அருள்புரம், -உப்பிலிபாளையம் செல்லும் ரோட்டில், வழித்தடம் எங்கும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. தேங்கும் இடத்தில், குப்பைகளை அகற்றிவிட்டு, அங்கு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அவற்றுக்கு குளுகோஸ் பாட்டில்கள் மூலம், தண்ணீர் கிடைக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. சுகாதார சீர்கேட்டை தடுக்க, ஊராட்சி மேற்கொண்டுள்ள இந்த நுாதன முயற்சி, மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X