பொது செய்தி

தமிழ்நாடு

இலக்கை நோக்கி பசுமை பயணம்!

Added : ஆக 20, 2021
Share
Advertisement
திருப்பூர்:'வனத்துக்குள் திருப்பூர் - 7' திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டம் 56 ஆயிரத்தை கடந்து வெற்றிகரமாக இலக்கை நோக்கி சென்று கொண்டுள்ளது.திருப்பூர் மாவட்டம் முழுவதும் பசுமையை ஏற்படுத்தும் வகையில் 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில், முந்தைய ஆறு திட்டங்களில் 10.5 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ள
 இலக்கை நோக்கி  பசுமை பயணம்!

திருப்பூர்:'வனத்துக்குள் திருப்பூர் - 7' திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் திட்டம் 56 ஆயிரத்தை கடந்து வெற்றிகரமாக இலக்கை நோக்கி சென்று கொண்டுள்ளது.திருப்பூர் மாவட்டம் முழுவதும் பசுமையை ஏற்படுத்தும் வகையில் 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டம் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில், முந்தைய ஆறு திட்டங்களில் 10.5 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ள நிலையில், கடந்த ஜூன் மாதம் மேலும் 2 லட்சம் மரக்கன்றுகள் என்ற இலக்குடன் 'திட்டம் 7' துவக்கப்பட்டது.வரும் டிச., 31ம் தேதிக்குள் இந்த இலக்கை எட்டும் நோக்கில் இந்த பசுமைப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வகையில், இதுவரை 56 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் 100 இடங்களில் நடப்பட்டுள்ளன.இத்திட்டத்தில் நேற்று வெள்ளகோவிலை அடுத்த மூலனுாரில், கழுத்தரிக்காபாளையம் கிராமத்தில் வெட்டுக்காட்டு தோட்டத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. நில உரிமையாளர்கள் நல்லசாமி, விஜயா மற்றும் செல்வகுமார் பங்கேற்றனர். மொத்தம், 850 செம்மரக்கன்றுகள் நடப்பட்டன.இத்திட்டத்தில் தங்களை இணைத்து கொண்டு, மரக்கன்று நட்டு பராமரிக்க விரும்புவோர், திட்ட கள அலுவலரை, 90470 86666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திட்டக்குழுவினர் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X