பொது செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் போராட்டம் விக்கிரமராஜா

Added : ஆக 20, 2021
Share
Advertisement
திண்டுக்கல்:'பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்', என, திண்டுக்கல்லில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறினார்.அவர் கூறியது: மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் வணிகர்களை உறுப்பினராக சேர்க்கும் பணிகளை தொடங்கி உள்ளோம். வரி விதிப்பு வெளிப்படையாக இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா காலத்தில் பேரூராட்சி,

திண்டுக்கல்:'பெட்ரோல், டீசல் விலையை குறைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும்', என, திண்டுக்கல்லில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறினார்.

அவர் கூறியது: மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் வணிகர்களை உறுப்பினராக சேர்க்கும் பணிகளை தொடங்கி உள்ளோம். வரி விதிப்பு வெளிப்படையாக இருக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொரோனா காலத்தில் பேரூராட்சி, உள்ளாட்சி, அறநிலைத்துறை, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகள் மூடப்பட்டது. அந்த கடைகளுக்கு வாடகை தள்ளுபடி செய்ய வலியுறுத்தி முதல்வரை சந்திக்க உள்ளோம்.

ஜி.எஸ்.டி., தொடர்பாக வணிகர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இதனால் வியாபாரிகள் மன உளைச்சலில் உள்ளனர். பெட்ரோல் விலையை மாநில அரசு ரூ.3 குறைத்துள்ளது. மத்திய, மாநில அரசு டீசல் விலையையும் குறைக்க வேண்டும். இவற்றின் விலை குறைந்தால் மற்ற பொருள்களின் விலை குறையும்.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும். கேரளாவில் வணிகர்களுக்கு ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. அதே போல் தமிழக வணிகர்களுக்கும் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X