பொது செய்தி

தமிழ்நாடு

புதுராமகிருஷ்ணாபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
திருப்பூர்:திருப்பூர் புதுராமகிருஷ்ணாபுரத்தில் செயல்படும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அப்பகுதியைச் சேர்ந்த பல்லாயிரம் குடும்பங்களுக்கு மருத்துவ சேவை அளித்து வருகிறது.இம்மையம் இயங்கிய கட்டடம் பழுதடைந்த நிலையில் இதற்கு புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இரு வீதிகள் தள்ளி ஒரு வாடகை கட்டடத்தில் சுகாதார நிலையம் மாற்றம் செய்து அங்கு இயங்கத்
 புதுராமகிருஷ்ணாபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம்

திருப்பூர்:திருப்பூர் புதுராமகிருஷ்ணாபுரத்தில் செயல்படும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், அப்பகுதியைச் சேர்ந்த பல்லாயிரம் குடும்பங்களுக்கு மருத்துவ சேவை அளித்து வருகிறது.இம்மையம் இயங்கிய கட்டடம் பழுதடைந்த நிலையில் இதற்கு புதிய கட்டடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இரு வீதிகள் தள்ளி ஒரு வாடகை கட்டடத்தில் சுகாதார நிலையம் மாற்றம் செய்து அங்கு இயங்கத் துவங்கியது.மாநகராட்சி நிர்வாகம் மூலம் புதிய சுகாதார நிலையம் கட்டுமானப் பணி நிறைவடைந்தது. பல மாதமாகியும் கட்டடம் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.மாநகராட்சி பொறியியல் பிரிவினர் கூறுகையில், ''சுகாதார நிலையம் சுகாதார பிரிவினர் குறிப்பிடும் சிறிய பணிகள் மட்டுமே நிலுவையில் உள்ளது.விரைவில் பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வரும்'' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X