பொது செய்தி

தமிழ்நாடு

தொற்று தடுப்பு 'மாயம்' கலெக்டர் ஆபீசிலேயே! திரண்ட கூட்டம்...திணறிய அதிகாரிகள்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
திருப்பூர்;அடுக்கு மாடி குடியிருப்பில், வீடு கேட்டு விண்ணப்பிக்க, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் குவிந்ததால், தொற்று தடுப்பு மாயமானது.திருப்பூர் மாவட்டத்தில் குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் பல்வேறு தரப்பினருக்கும் வீடு ஒதுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாற்று
 தொற்று தடுப்பு 'மாயம்'  கலெக்டர் ஆபீசிலேயே! திரண்ட கூட்டம்...திணறிய அதிகாரிகள்

திருப்பூர்;அடுக்கு மாடி குடியிருப்பில், வீடு கேட்டு விண்ணப்பிக்க, திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் குவிந்ததால், தொற்று தடுப்பு மாயமானது.

திருப்பூர் மாவட்டத்தில் குடிசை மாற்று வாரியம் மூலம் அடுக்கு மாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றில் பல்வேறு தரப்பினருக்கும் வீடு ஒதுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாற்று திறனாளிகள் மற்றும் ஆதரவற்ற இளம் விதவைகளுக்கும் சிறப்பு ஒதுக்கீடாக வீடுகள் வழங்க முடிவு செய்யப்பட்டது.இதற்காக தகுதியுடைய பயனாளிகள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததால், நுாற்றுக்கணக்கானோர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று திரண்டனர்.கலெக்டர் நுழைவாயில், மரத்தடி, அலுவலக வளாகத்தின் முன் மற்றும் பின், குறை கேட்பு கூட்ட அரங்கம் என வளாகத்தின் பெரும்பகுதி, மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இதனால், கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவு இருந்தது.எந்த பகுதியிலும் சமூக இடைவெளி காணப்படவில்லை. முக கவசம் அணியாமல் பலரும் வந்திருந்தனர். இதைக் கண்காணிக்கவோ, கட்டுப்படுத்தவோ ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை.மாற்று திறனாளிகள் கூறுகையில், 'வீடு கேட்டு விண்ணப்பிக்க நேரடியாக வரவழைத்தது தவிர்க்கப்பட்டிருக்கலாம். மனுக்களை தபால் அல்லது ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்க அறிவுறுத்தினால் இது போன்ற சங்கடங்களை தவிர்க்கலாம்,' என்றனர்.----படம்(5 அல்லது 6 காலம்)அச்சம் இல்லை... அச்சம் இல்லை... அச்சம் என்பது இல்லையே!சமூக இடைவெளிக்கு துளி கூட இடம் இல்லாமல், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில்தான், இப்படி ஒரு கூட்டம்; குடிசை மாற்று வாரியம் மூலம், அடுக்கு மாடி குடியிருப்புகளை ஒதுக்குவதற்கான விண்ணப்பங்களை வழங்க மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோர் முட்டி மோதுகின்றனர். தொற்று தடுப்பு வழிமுறைகளை, இங்கேயே கடைபிடிக்க முடியாதபோது, பொதுமக்களிடம், விழிப்புணர்வு ஏற்படுத்துவது என்பது, பெயரளவுக்கு தான் இருக்கும்!-------காற்றில் பறக்கிறது!* கலெக்டர் உத்தரவு...* இரவில் கடை திறப்புதிருப்பூர், ஆக. 20-தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கையாக, மாலை 6:00 மணியுடன் கடைகள் மூடப்பட வேண்டும் என்ற மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவு, திருப்பூரில், மீறப்பட்டு வருகிறது.தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கையாக, திருப்பூர் மாவட்டம் முழுவதும் மருந்தகம், பால் விற்பனை தவிர அனைத்து கடைகளும் மாலை 6:00 மணி வரை மட்டும் செயல்பட வேண்டும் என கலெக்டர் வினீத் உத்தரவிட்டுள்ளார்.உத்தரவை ஏற்று நகரின் முக்கிய வீதியில் உள்ள கடைகள் மட்டுமே மாலை 6:00 மணிக்கு மூடப்படுகின்றன. குறுக்கு சந்து வீதிகளில் உள்ள கடைகள் இரவு 8:00 மணி வரை சுறுசுறுப்பாக செயல்படுகின்றன.லட்சுமிநகர், பிரிட்ஜ்வே காலனி, பி.என்.,ரோடு - ராம்நகர் முதல் மூன்று வீதிகள், புது பஸ் ஸ்டாண்ட் எதிர்புறம், 60 அடி ரோடு, யூனியன் மில் ரோடு, வாலிபாளையம், கோர்ட் வீதி உள்ளிட்ட இடங்களில் மின்சாதனங்கள், மளிகை, பேன்சி ஸ்டோர் உள்ளிட்ட கடைகள் செயல்படுகின்றன.குறிப்பாக பேக்கரிகளில் அமர்ந்து டீ, காபி, பப்ஸ் சாப்பிட அனுமதி வழங்கப்படுகிறது. ஓட்டல்கள் மட்டுமே திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது; அவற்றை ஒட்டிய இருக்கும் கடைகளும் முழுமையாக ஷட்டர் திறந்து செயல்படுகின்றன. முக்கிய சந்திப்பு, சிக்னல்களில் சைரன் சத்தத்துடன் வந்து எச்சரிக்கை செய்யும் போலீசார், இப்பகுதிகளை கண்காணிப்பதில்லை.சமூக இடைவெளி இல்லாமல் கூட்டமாக மக்கள் நின்று பொருட்களை வாங்கிச்செல்கின்றனர். மாவட்டத்தில் தொற்று பாதிப்பு அதிகரிக்காமல் தடுக்க, கலெக்டரின் அறிவிப்பை நிறுவனங்கள் முழுமையாக செயல்படுத்த முன்வர வேண்டும்.-----திருப்பூர் லட்சுமி நகரில், இரவிலும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X