சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திருப்புத்தூர் யானை 'சிவகாமி' முக்தி

Added : ஆக 20, 2021
Share
Advertisement
திருப்புத்துார்:திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயில் யானை சிவகாமி உடல்நலமின்றி முக்தி அடைந்தது.இங்குள்ள திருத்தளிநாதர் கோயிலில் 1970 ல் 2 வயதில் பெண் யானை 'சிவகாமி' இங்கு வளர தொடங்கியது. கோயில் நிர்வாகம் சார்பில் 52 ஆண்டாக இக்கோயில் யானையை பராமரித்து வந்தனர். அனைத்து உற்ஸவங்களிலும் 'சிவகாமி' வலம் வந்தது. மக்களின் செல்லக் குழந்தையாக சுற்றி வந்தது. முதுமையின்

திருப்புத்துார்:திருப்புத்துார் திருத்தளிநாதர் கோயில் யானை சிவகாமி உடல்நலமின்றி முக்தி அடைந்தது.

இங்குள்ள திருத்தளிநாதர் கோயிலில் 1970 ல் 2 வயதில் பெண் யானை 'சிவகாமி' இங்கு வளர தொடங்கியது. கோயில் நிர்வாகம் சார்பில் 52 ஆண்டாக இக்கோயில் யானையை பராமரித்து வந்தனர். அனைத்து உற்ஸவங்களிலும் 'சிவகாமி' வலம் வந்தது. மக்களின் செல்லக் குழந்தையாக சுற்றி வந்தது. முதுமையின் காரணமாக சில நாட்களாக பின்னங்காலில் வலி ஏற்பட்டு நிற்கமுடியாமல் தவித்தது.

சத்தியமங்கலம் வனத்துறை டாக்டர்கள் அசோகன், அன்புநாயகம், பாலகிருஷ்ணன் ஆகியோர் சிகிச்சை அளித்து வந்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் 'சிவகாமி' முக்தியடைந்தது. குன்றக்குடி பொன்னம்பல அடிகள் யானைக்கு மரியாதை செலுத்தினார். கோயில் நந்தவனத்தில் நல்லடக்கம் செய்தனர். பக்தர்கள் கண்ணீர் மல்க யானைக்கு அஞ்சலி செலுத்தினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X