சம்பவம் செய்தி

தமிழ்நாடு

12 டன் குட்கா பறிமுதல்: மேலும் 6 பேர் கைது

Added : ஆக 20, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பல்லடம்:பல்லடத்தில், குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், மேலும், 6 பேரை போலீசார் கைது செய்தனர்.பல்லடம் அருகே கரடிவாவி, காரணம்பேட்டை, செம்மிபாளையம் பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 12 டன் குட்கா பொருட்களை, போலீசார் பறிமுதல் செய்தனர். இதில், தொடர்புடைய, மைக்கேல் ரெக்ஸ் 27, சிவகுமார் 32, ஜான் ஷஜூ 28, சதீஷ், 32 ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில்
 12 டன் குட்கா பறிமுதல்: மேலும் 6 பேர் கைது

பல்லடம்:பல்லடத்தில், குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில், மேலும், 6 பேரை போலீசார் கைது செய்தனர்.பல்லடம் அருகே கரடிவாவி, காரணம்பேட்டை, செம்மிபாளையம் பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, 12 டன் குட்கா பொருட்களை, போலீசார் பறிமுதல் செய்தனர். இதில், தொடர்புடைய, மைக்கேல் ரெக்ஸ் 27, சிவகுமார் 32, ஜான் ஷஜூ 28, சதீஷ், 32 ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த வழக்கில், தலைமறைவாக இருந்த, கொடைக்கானலை சேர்ந்த சுந்தரபாண்டியன், 21, சாத்தான்குளத்தை சேர்ந்த அந்தோணி ஜெகன், 40, நவராஜ், 55, குணசேகரன், 42, அந்தோணிராஜ், 33, சங்ககிரியை சேர்ந்த தனராஜ், 48 ஆகிய ஆறு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து, 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.போலீசார் கூறுகையில், 'கைதான குணசேகரின் கூட்டாளிகள்தான் கைதான மற்ற எட்டு பேரும்; அனைவரும், கோவை மாவட்டம், சரவணம்பட்டி, கணபதி மற்றும் பல்லடம் பகுதிகளில் தங்கியுள்ளனர். கர்நாடகாவில் இருந்து குட்கா பொருட்களை வாங்கி, விற்று வந்துள்ளனர். தலைமறைவாக உள்ள தங்கராஜை தேடி வருகிறோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
20-ஆக-202105:04:42 IST Report Abuse
Mani . V ஆட்சி மாறினாலும் அவலம் மாறாது. அப்படின்னா இந்த குட்கா டிஸ்டிபூட்டர்கள் யார்? யார்? இரண்டு கட்சியையும் சேர்ந்தவர்கள்தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X