சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஹவாலா கும்பலிடம் கொள்ளை 6 பேர் கைது

Added : ஆக 20, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்:ஹவாலா பணம் கடத்துபவர்களை கண்காணித்து கொள்ளையடிக்கும் முகமூடி கும்பலை சேர்ந்த 6 பேரை ராமநாதபுரத்தில் போலீசார் கைது செய்தனர்.குற்றப்பிரிவு எஸ்.ஐ., ராமச்சந்திரன் தலைமையிலான தனிப்படையினர் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் ரயில் நிலையம் பகுதியில் நின்ற காரை சோதனையிட்டனர். 2 அரிவாள், 2 கத்தி, இரண்டு ஸ்பேனர், மூன்று கையுறை, மூன்று

ராமநாதபுரம்:ஹவாலா பணம் கடத்துபவர்களை கண்காணித்து கொள்ளையடிக்கும் முகமூடி கும்பலை சேர்ந்த 6 பேரை ராமநாதபுரத்தில் போலீசார் கைது செய்தனர்.

குற்றப்பிரிவு எஸ்.ஐ., ராமச்சந்திரன் தலைமையிலான தனிப்படையினர் நேற்று முன்தினம் இரவு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். ராமநாதபுரம் ரயில் நிலையம் பகுதியில் நின்ற காரை சோதனையிட்டனர். 2 அரிவாள், 2 கத்தி, இரண்டு ஸ்பேனர், மூன்று கையுறை, மூன்று முகமூடி, இரும்பு கம்பி, ரூ.1 லட்சம், காரை பறிமுதல் செய்தனர்.

தப்ப முயன்ற வேலுார் பிஷப் டேவிட் நகர் ரஹீம் 32, ஓட்டேரி பார்த்திபன் 43, கார்த்திக் 41, பங்களா பகுதி இப்ராஹிம் 44, ஆரணி ரோடு ராபர்ட் ஜான் கென்னடி 30, கீழக்கரை சேர்ந்த செய்யது முகமது பக்கர் 47, ஆகியோரை கைது செய்தனர்.

டி.எஸ்.பி., ராஜா நடத்திய விசாரணையில், இவர்கள் ஹவாலா பணம் கைமாற்றும் நபர்களை கண்காணித்து கொள்ளையடிப்பதை வாடிக்கையாக வைத்திருப்பது தெரியவந்தது. கொள்ளை குறித்து ஹவாலா கும்பல் போலீசில் புகாரளிக்க மாட்டார்கள் என்பதால் இம்முறையை பின்பற்றினர்.2020 மார்ச்சில் ராமநாதபுரம் ரயில்வே கேட் அருகே கீழக்கரையை சேர்ந்த ஹவாலா பணமோசடி கும்பலை வழிமறித்து ரூ.20 லட்சத்தை கொள்ளையடித்ததும், தற்போதும் கொள்ளையடிக்க திட்டமிட்டு காத்திருந்ததும் தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X