பொது செய்தி

தமிழ்நாடு

தாலுகா ஆபீசில் இனி குறைகேட்பு

Added : ஆக 20, 2021
Share
Advertisement
திருப்பூர்:தொற்று தடுப்பு நடவடிக்கையாக, மக்கள் கூடுவதை கட்டுப்படுத்தும் வகையில், கலெக்டர் அலுவலகத்தில், திங்கட்கிழமைதோறும் நடத்துவதற்கு பதிலாக தாலுகா அலுவலகங்களில், குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் வினீத் அறிக்கை:திங்கட்கிழமை தோறும் குறை கேட்பு நாளில் கூட்டம் சேர்வதை தவிர்க்கும் வகையில் அனைத்து தாலுகா அலுவலங்களிலும் இந்த

திருப்பூர்:தொற்று தடுப்பு நடவடிக்கையாக, மக்கள் கூடுவதை கட்டுப்படுத்தும் வகையில், கலெக்டர் அலுவலகத்தில், திங்கட்கிழமைதோறும் நடத்துவதற்கு பதிலாக தாலுகா அலுவலகங்களில், குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் வினீத் அறிக்கை:திங்கட்கிழமை தோறும் குறை கேட்பு நாளில் கூட்டம் சேர்வதை தவிர்க்கும் வகையில் அனைத்து தாலுகா அலுவலங்களிலும் இந்த குறை கேட்பு நிகழ்ச்சி நடைபெறும்.வரும் 23 ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும். மேலும் கலெக்டருக்கு இ-மெயில் மூலம் collrtup@nic.in என்ற முகவரியிலும், வாட்ஸ் ஆப் மூலம் 97000 41114 என்ற எண்ணிலும், 0421 296 9999 என்ற தொலை பேசி எண்ணிலும் குறைகள் தெரிவிக்கலாம். இந்த குறை கேட்பு வாரம் தோறும் திங்கட்கிழமை காலை 10:30 முதல் பகல் 1:00 மணி வரை நடைபெறும்.கலெக்டர் ஆபீசில்மனு பெறப்படாதுகொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, வரும் 23 ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை, கலெக்டர் அலுவலகத்தில் நேரடியாக மனுக்கள் பெறப்படாது.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.கலெக்டர் ஆபீசில்மனு பெறப்படாதுமனு கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக, வரும் 23 ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை, கலெக்டர் அலுவலகத்தில் நேரடியாக மனுக்கள் பெறப்படாது.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X