நிலத்தடி நீரை உயர்த்தும் மழைநீர் சேமிப்பு குட்டைகள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நிலத்தடி நீரை உயர்த்தும் மழைநீர் சேமிப்பு குட்டைகள்

Added : ஆக 20, 2021
Share
கூடலுார்;முதுமலை பகுதிகளில், நிலத்தடி நீரை உயர்த்த, குட்டைகள் அமைத்து, மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கூடலுார் முதுமலை பகுதிகளில் ஜூனில் துவங்கும் பருவமழை அக்., வரை தொடரும். மழை நீரை சேமிக்க எந்த வசதியும் இல்லாததால், மழை நீர் தாழ்வான பகுதிகளில் வழிந்தோடி வீணாகிறது.இந்நிலையில், முதுமலை தொரப்பள்ளி வன சோதனை சாவடி அருகே, வனத்துறை சார்பில் சாலையோரம் மழை நீர்
 நிலத்தடி நீரை உயர்த்தும்  மழைநீர் சேமிப்பு குட்டைகள்

கூடலுார்;முதுமலை பகுதிகளில், நிலத்தடி நீரை உயர்த்த, குட்டைகள் அமைத்து, மழை நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.கூடலுார் முதுமலை பகுதிகளில் ஜூனில் துவங்கும் பருவமழை அக்., வரை தொடரும். மழை நீரை சேமிக்க எந்த வசதியும் இல்லாததால், மழை நீர் தாழ்வான பகுதிகளில் வழிந்தோடி வீணாகிறது.இந்நிலையில், முதுமலை தொரப்பள்ளி வன சோதனை சாவடி அருகே, வனத்துறை சார்பில் சாலையோரம் மழை நீர் சேமிப்பு குட்டை அமைத்து, மழை நீர் சேமித்து வருகின்றனர். இதன் மூலம், அப்பகுதியில், நிலத்தடி நீர் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில்,'மலை சார்ந்த இப்பகுதியில், மழை நீர் தேங்க வழியின்றி, தாழ்வான பகுதியில் வழிந்தோடி வீணாகிறது. குட்டைகள் அமைத்து மழைநீரை சேமிப்பதன் மூலம், நிலத்தடி நீர் மட்டம் உயரும். கோடையில் தண்ணீர் பற்றாக்குறை தவிர்க்கப்படும். இதனை கருத்தில்கொண்டு, மழைநீர் சேமிப்பு குட்டைகள் அமைத்து மழை சேமிக்கும், திட்டத்தை அரசு இப்பகுதிகளில் செயல்படுத்த வேண்டும்,' என்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X