கரடியை பிடிக்க கூண்டு வனத்துறை நடவடிக்கை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கரடியை பிடிக்க கூண்டு வனத்துறை நடவடிக்கை

Added : ஆக 20, 2021
Share
கோத்தகிரி;கோத்தகிரி நகரப் பகுதியில், சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கோத்தகிரி -குன்னுார் சாலையில், வளம் மீட்பு பூங்கா பகுதியில், இரு நாட்களுக்கு முன்பு, கரடிகள் குப்பைகளை கிளறி, அவ்வழியாக சென்றவர்களை துரத்தியதால், மக்கள் தப்பி ஓடியுள்ளனர்.'பாதுகாப்பு கருதி, கூண்டு வைத்து, கரடிகளை பிடிக்க வேண்டும்,' என, பகுதி மக்கள் வலியுறுத்தினர். அதன்படி, நேற்று

கோத்தகிரி;கோத்தகிரி நகரப் பகுதியில், சமீப காலமாக கரடிகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கோத்தகிரி -குன்னுார் சாலையில், வளம் மீட்பு பூங்கா பகுதியில், இரு நாட்களுக்கு முன்பு, கரடிகள் குப்பைகளை கிளறி, அவ்வழியாக சென்றவர்களை துரத்தியதால், மக்கள் தப்பி ஓடியுள்ளனர்.'பாதுகாப்பு கருதி, கூண்டு வைத்து, கரடிகளை பிடிக்க வேண்டும்,' என, பகுதி மக்கள் வலியுறுத்தினர். அதன்படி, நேற்று முன்தினம் இரவு, அப்பகுதியில் வனத்துறை சார்பில், கூண்டு வைக்கப்பட்டது. மேலும், வனத்துறையினர் தொடர்ந்து, கண்காணித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X