பொது செய்தி

இந்தியா

'சீக்கியர்கள் பயப்பட வேண்டாம்': தலிபான்கள் நேரில் உறுதி

Updated : ஆக 20, 2021 | Added : ஆக 20, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
புதுடில்லி : ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள குருத்வாராவுக்கு நேரில் சென்ற தலிபான்கள் 'சீக்கியர்கள் பயப்பட வேண்டாம்; பாதுகாப்பு அளிப்போம்' என உறுதி அளித்துஉள்ளனர்.தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் முழுதும் தலிபான் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.இதையடுத்து தங்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அங்குள்ள ஹிந்துக்களும் சீக்கியர்களும் அச்சம்
Taliban, Gurdwara, Kabul, Safety of Sikh, Hindus, Afghanistan

புதுடில்லி : ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள குருத்வாராவுக்கு நேரில் சென்ற தலிபான்கள் 'சீக்கியர்கள் பயப்பட வேண்டாம்; பாதுகாப்பு அளிப்போம்' என உறுதி அளித்துஉள்ளனர்.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தான் முழுதும் தலிபான் பயங்கரவாதிகள் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது.இதையடுத்து தங்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் என அங்குள்ள ஹிந்துக்களும் சீக்கியர்களும் அச்சம் அடைந்துள்ளனர். இந்தியாவுக்கு திரும்புவதற்கான முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுஉள்ளனர்.

'தலைநகர் காபூலில் உள்ள குருத்வாராவில் 200க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களை மீட்க வேண்டும்' என பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் உள்ளிட்டோர் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் காபூலில் உள்ள குருத்வாராவுக்கு தலிபான்கள் சென்றுள்ளனர். குருத்வாரா தலைவர் உள்ளிட்டோரை சந்தித்து பேசியுள்ளனர்.

'தங்களுடைய பாதுகாப்பு குறித்து சீக்கியர்கள் அச்சப்பட தேவையில்லை' என அவர்கள் உறுதி அளித்துள்ளனர். இது தொடர்பான 'வீடியோ'வை தலிபான் செய்தித் தொடர்பாளர் நயீம் சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ளார். அகாலி தளத்தின் மூத்த தலைவரும் டில்லி சீக்கிய குருத்வாரா நிர்வாகக் குழு தலைவருமான மஜிந்தர் சிங் சிர்சாவும் அந்த 'வீடியோ'வை சமூக வலை தளத்தில் வெளியிட்டுள்ளார்.


latest tamil news



'காபூலில் உள்ள குருத்வாரா நிர்வாகிகளுடன் தொடர்ந்து பேசி வருகிறோம். அச்சப்பட தேவையில்லை என தலிபான்கள் கூறியுள்ளதாக குருத்வாரா நிர்வாகிகள் தெரிவித்துஉள்ளனர். 'நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்' என அந்த பதிவில் சிர்சா குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
21-ஆக-202104:53:38 IST Report Abuse
meenakshisundaram நாங்க மதத்துக்காக சண்டைதான் போடுவமே தவிர என்னிக்கும் மதத்தை பின் பற்ற மாட்டோம் ? தலிபான் போன்றோரின் மின்ட் வாய்ஸ் .
Rate this:
Cancel
mathimandhiri - chennai,இந்தியா
20-ஆக-202115:58:17 IST Report Abuse
mathimandhiri அந்தக் காட்டுமிராண்டிகளுக்கு கொலை கற்பழிப்பு எல்லாம் சர்வ சாதாரணம்////மார்கத்துக்காக தாங்கள் செய்யும் வழிபாட்டு முறை என்று கூறி விடுவான்கள்/// அவன்களுக்கு எல்லாமே தங்கள் மதம் தான்/// தங்கள் போக்கிலேயே மனித வம்சத்தை அழித்துக் கொண்டே அதை மதத்துக்கான தங்கள் தியாகம் என்று கூறுவான்கள். ///அவன்கள் இன்னும் பத்தாயிரம் ஆண்டு போனாலும் மனித நாகரீகத்துக்கு அந்த வரம்புக்குள் வர மாட்டான்கள்///.அதெல்லாம் சரி இங்கிருக்கும் கூலிபான்களை என்ன செய்வது? இந்த நாட்டின் சோற்றை தின்று கொண்டே அவனுங்களுக்கு கூஜா தூக்கறானுங்களே?
Rate this:
Cancel
ram - mayiladuthurai,இந்தியா
20-ஆக-202114:36:04 IST Report Abuse
ram அவர்கள் விருப்பப்பட்டால் இங்கு அழைத்து வரலாம் இல்லை தலிபான்கள் வாக்குறுதி கொடுத்து விட்டார்கள் நாங்கள் இங்கேயே இருக்கோம் என்றால் விட்டு விடலாம். அனால் எதாவது எதிர்காலத்தில் நடந்து விட்டால் மோடியால் வந்தது என்று சொல்ல கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X