மின்னணு ஓட்டுப்பதிவு கருவிக்கு தடை கோரி சுப்ரீம் கோர்ட்டில் மனு

Updated : ஆக 20, 2021 | Added : ஆக 20, 2021 | கருத்துகள் (7)
Share
Advertisement
புதுடில்லி : தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த தடை கோரிய மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.டில்லி உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் ஜெயா சுகின் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: ஓட்டுச்சீட்டுகளை பயன்படுத்தி, தேர்தல் நடத்துவது தான், நம்பிக்கைக்குரியது. எந்த
EVM Machines, Supreme Court, Election Commission, Electronic Voting Machines, EVM, ballot papers

புதுடில்லி : தேர்தலில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த தடை கோரிய மனுவை, டில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டில்லி உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் ஜெயா சுகின் என்பவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது: ஓட்டுச்சீட்டுகளை பயன்படுத்தி, தேர்தல் நடத்துவது தான், நம்பிக்கைக்குரியது. எந்த சந்தேகத்துக்கும் இடம் அளிக்காது. பல நாடுகளில், ஓட்டுச்சீட்டு முறையில் தான் தேர்தல் நடத்தப்படுகிறது.


latest tamil news


ஆனால், இந்தியாவில் கடந்த 20 ஆண்டுகளாக தேர்தல்கள், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் வாயிலாக நடத்தப்படுகிறது.இதன் மீதான நம்பக்தன்மை, மிக குறைவாக உள்ளது. மோசடிகள் நடக்கவும் அதிக வாய்ப்புள்ளது. பல நாடுகள், மின்னணு ஓட்டுப்பதிவு முறையை ரத்து செய்துவிட்டன. அதனால், இந்தியாவிலும், இனி வரும் தேர்தல்களில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்த, தடை விதிக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை தள்ளுபடி செய்த உயர் நீதிமன்றம், 'மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடப்பதற்கான எந்த ஆதாரத்தையும், மனுதாரர் தாக்கல் செய்யவில்லை. நீதிமன்ற நேரத்தை வீணடித்ததற்காக, மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது' என, தெரிவித்தது.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஜெயா சுகின் மனு தாக்கல் செய்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
20-ஆக-202117:43:57 IST Report Abuse
DVRR சுப்ரீம் கோர்ட் என்ன இவ்வளவு கேவலமாக செயல்படுகின்றது? ஒரு வழக்கு என்று வந்தால் அதில் ஏற்கனவே விசாரித்து மூடப்பட்டது என்றால் உடனே அந்த கேஸை கான்செல் செய்ய வேண்டும் மற்றும் அந்த ஆளுக்கு குறைந்தது ரூ 1 கோடி அபராதம் விதிக்க வேண்டும் அப்போது தான் இந்த அறிவிலித்தனம் நிற்கும்.
Rate this:
Cancel
S Ramkumar - Tiruvarur,இந்தியா
20-ஆக-202111:36:10 IST Report Abuse
S Ramkumar சூப்பர்
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
20-ஆக-202110:29:26 IST Report Abuse
S.Baliah Seer ஒரு தொகுதியில் மூன்று பேருக்கு மேல் மிகாமல் ஒரு தேர்தல் கமிஷனால் முடியவில்லை. சுயேச்சைகள் ஒரு தொகுதியில் மூன்று பேருக்குமேல் போட்டியிட்டால் அவர்களில் மூன்றுபேரை குலுக்கல் மூலம் வடிகட்ட முடியும்.ஒரே ஒரு அம ஆமண்ட்மென்ட். செய்தால் போதும். இதை மத்திய அரசு செய்யாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X