சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாஜி அதிகாரியிடம் மோசடி செய்தவருக்கு போலீஸ் வலை

Added : ஆக 20, 2021
Share
Advertisement
வடலுார்-என்.எல்.சி.,யில் ஓய்வு பெற்ற அதிகாரியின் மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ. 12 லட்சத்து 25 ஆயிரம் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், வடச்சேரியை சேர்ந்தவர் பாவநாசம், 63; நெய்வேலி என்.எல்.சி.,யில் தலைமை துணை மேலாளராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். பாவநாசம், என்.எல்.சி.,யில் வேலை பார்த்த போது, வடலுார் என்.எல்.சி., ஆபிசர்

வடலுார்-என்.எல்.சி.,யில் ஓய்வு பெற்ற அதிகாரியின் மகனுக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ரூ. 12 லட்சத்து 25 ஆயிரம் மோசடி செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், வடச்சேரியை சேர்ந்தவர் பாவநாசம், 63; நெய்வேலி என்.எல்.சி.,யில் தலைமை துணை மேலாளராக பணி புரிந்து ஓய்வு பெற்றவர். பாவநாசம், என்.எல்.சி.,யில் வேலை பார்த்த போது, வடலுார் என்.எல்.சி., ஆபிசர் நகரை சேர்ந்த ஜோசப்ராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர், பலருக்கு வெளிநாட்டில் வேலை வாங்கி கொடுத்தாக பாவநாசத்திடம் கூறியுள்ளார்.தனது மகன் சிவராஜிக்கும் வெளிநாட்டில் வேலை வாங்கி தருமாறு பாவநாசம் கேட்டுள்ளார். அதற்கு ரூ.12 லட்சத்து 25 ஆயிரம் கொடுத்தால் கனடாவில் வேலை வாங்கித் தருவதாக ஜோசப்ராஜ் கூறினார். அதை நம்பி பாவநாசம் ரூ.12 லட்சத்து 25 ஆயிரத்தை கடந்த 2018-ம் ஆண்டு ஜோசப்ராஜிடம் கொடுத்தார். பணத்தை பெற்ற அவர், 3 ஆண்டுகளுக்கு மேலாகியும் வேலை வாங்கித் தராமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் கடந்த மே மாதம் 3ம் தேதி தான் கொடுத்த பணத்தை பாவநாசம் திருப்பி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த ஜோசப்ராஜ் அவரை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து பாவநாசம் அளித்த புகாரின் பேரில், வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து, ஜோசப்ராஜை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X