சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முதல் மனைவியை விரட்டியவர் கைது

Added : ஆக 20, 2021
Share
Advertisement
சேத்தியாத்தோப்பு-சேத்தியாத்தோப்பு அடுத்த துறிஞ்சிக்கொல்லையில் 2ம் திருமணம் செய்து முதல் மனைவியை விரட்டியவரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த வடக்குத்தெருவைச் சேர்ந்த நாகராஜன் மகன் ராஜூ, 34; அதே பகுதியைச் சேர்ந்தவர் சுமதி, 31; இருவரும் 14 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துள்ளனர்.சுதீஷ்குமார், 13; சுவாதி, 12; என இரு

சேத்தியாத்தோப்பு-சேத்தியாத்தோப்பு அடுத்த துறிஞ்சிக்கொல்லையில் 2ம் திருமணம் செய்து முதல் மனைவியை விரட்டியவரை அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.கடலுார் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அடுத்த வடக்குத்தெருவைச் சேர்ந்த நாகராஜன் மகன் ராஜூ, 34; அதே பகுதியைச் சேர்ந்தவர் சுமதி, 31; இருவரும் 14 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துள்ளனர்.சுதீஷ்குமார், 13; சுவாதி, 12; என இரு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு சுமதி மற்றும், குழந்தைகளை விட்டு ராஜூ பிரிந்து சென்றார்குழந்தைகளுடன் கணவர் ராஜூ வீட்டில் சுமதி வசித்தார். கடந்த மாதம் தாய் இறப்பிற்கு ராஜூ சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில் கடந்த 10ம் தேதி விருத்தாசலம் அடுத்த கோமங்கலம் சிவப்பிரகாசம் மகள் ஜீவிதாவை இரண்டாவதாக ராஜூ திருமணம் செய்து கொண்டார். பின், துறிஞ்சிக்கொல்லை வந்து தனது வீட்டிலிருந்த முதல் மனைவி சுமதியை அடித்து வீட்டை விட்டு விரட்டியுள்ளார். சுமதி கொடுத்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து ராஜூவை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X