மனைவி, குழந்தையை தாக்கி கஞ்சா போதையில் ரகளை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவி, குழந்தையை தாக்கி கஞ்சா போதையில் ரகளை

Added : ஆக 20, 2021
Share
விருத்தாசலம்-விருத்தாசலத்தில் மனைவி மற்றும் குழந்தையை கஞ்சா போதையில் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.கடலுார் மாவட்டம் விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் நேற்று காலை வாலிபர் ஒருவர் கஞ்சா போதையில் மனைவியை தாக்கினார். அங்கிருந்தவர்கள் தடுத்தனர். அவர்களை ஆபாசமாக பேசி தாக்க முயன்றார். பின், அடி தாங்க முடியாமல், அவரது மனைவி, குழந்தை ஆட்டோவில் தப்ப முயன்றனர்.

விருத்தாசலம்-விருத்தாசலத்தில் மனைவி மற்றும் குழந்தையை கஞ்சா போதையில் தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.கடலுார் மாவட்டம் விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் நேற்று காலை வாலிபர் ஒருவர் கஞ்சா போதையில் மனைவியை தாக்கினார். அங்கிருந்தவர்கள் தடுத்தனர். அவர்களை ஆபாசமாக பேசி தாக்க முயன்றார். பின், அடி தாங்க முடியாமல், அவரது மனைவி, குழந்தை ஆட்டோவில் தப்ப முயன்றனர். ஆட்டோவிலும் ஏறி அவர்களை சரமாரியாக தாக்கினார்.இதையறிந்த சப் இன்ஸ்பெக்டர் ஜம்புலிங்கம் அங்கு சென்றார். போலீசார் வருவதைப் பார்த்த நபர் தப்பியோடினார். போதை ஆசாமி, மனைவி மற்றும் குழந்தையை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.இது தொடர்பாக புகார் கொடுக்காததால், வழக்கு எதுவும் பதியவில்லை.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X