பொது செய்தி

தமிழ்நாடு

வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை

Added : ஆக 20, 2021
Share
Advertisement
சேத்தியாத்தோப்பு-வீராணம் ஏரி நிரம்பி வரும் நிலையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடலுார் மாவட்டம், வீராணம் ஏரி 14 கி. மீ., துாரம், 6 கி.மீ., அகல பரப்பளவு கொண்டுள்ளது. மாவட்டத்திலேயே மிகப்பெரிய ஏரியில் 48 முதல் 50 அடி வரை தண்ணீர் தேக்கி சென்னை மெட்ரோ குடிநீர் மற்றும் கடலுார் மாவட்டத்தில் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து

சேத்தியாத்தோப்பு-வீராணம் ஏரி நிரம்பி வரும் நிலையில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடலுார் மாவட்டம், வீராணம் ஏரி 14 கி. மீ., துாரம், 6 கி.மீ., அகல பரப்பளவு கொண்டுள்ளது. மாவட்டத்திலேயே மிகப்பெரிய ஏரியில் 48 முதல் 50 அடி வரை தண்ணீர் தேக்கி சென்னை மெட்ரோ குடிநீர் மற்றும் கடலுார் மாவட்டத்தில் விவசாய பாசனத்திற்கு தண்ணீர் திறந்து பயன்படுத்தி வருகின்றனர்.கடந்த ஜூன் மாதம் மேட்டூரிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு கடந்த மாதம் கீழணைக்கு வந்தது. கீழணையிலிருந்து தண்ணீர் திறந்து வடவாறு வழியாக வீராணம் ஏரியில் நிரப்பப்பட்டது. தண்ணீர் வரத்து குறைவாக இருந்ததால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக ஏரி மெல்ல நிரம்பி வருகிறது. தற்போது ஏரியில் 42 அடி வரை தண்ணீர் நிரம்பிய நிலையில், ஏரியின் கீழ்க்கரை டெல்டா பகுதி விவசாயிகள் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் வரை சம்பா நடவு செய்ய நேரடி விதைப்பு, நாற்று விடும் பணிக்காக காத்திருக்கின்றனர்.ஜூலை இரண்டாவது வாரம் பாசனத்திற்கு வீராணம் ஏரிலிருந்து தண்ணீர் திறப்பது வழக்கம். இந்தாண்டு ஆகஸ்ட் 20 தேதியை கடந்தும் தண்ணீர் திறப்பது காலதாமதம் ஆவதால் சம்பா பருவ நெல் சாகுபடி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காலம் தாழ்த்தாமல் வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X