சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துணை மின்நிலைய வளாகத்தில் தீ விபத்தால் திடீர் பதற்றம்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
நெல்லிக்குப்பம்-நெல்லிக்குப்பம் அடுத்த நத்தப்பட்டு துணை மின்நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது.கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த நத்தப்பட்டில் மின்சார துணை மின்நிலையம் உள்ளது. இங்கிருந்து 100 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் மின்சப்ளை வழங்கப்படுகிறது. துணை மின்நிலைய வளாகத்தின் நுழைவு பகுதியில் டிரான்ஸ்பார்மர்களை பழுது

நெல்லிக்குப்பம்-நெல்லிக்குப்பம் அடுத்த நத்தப்பட்டு துணை மின்நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது.கடலுார் மாவட்டம், நெல்லிக்குப்பம் அடுத்த நத்தப்பட்டில் மின்சார துணை மின்நிலையம் உள்ளது. இங்கிருந்து 100 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கும் நகரங்களுக்கும் மின்சப்ளை வழங்கப்படுகிறது. துணை மின்நிலைய வளாகத்தின் நுழைவு பகுதியில் டிரான்ஸ்பார்மர்களை பழுது பார்க்கும் அறை உள்ளது. இங்கு ஆயில் கசிந்து இருக்கும்.நேற்றிரவு 8.30 மணிக்கு டிரான்ஸ்பார்மர் பழுது பார்க்கும் இடத்தில் மர்மமான முறையில் தீப்பிடித்து எரிந்தது. நெல்லிக்குப்பம், கடலுார் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் இறங்கினர். ஆயில் கசிந்திருந்த இடத்தில் தீவிபத்து ஏற்பட்டதால் தீயை அணைக்க வீரர்கள் சிரமப்பட்டனர்.தீ அணைக்கபட்டதால் துணை மின்நிலையத்திற்கு பாதிப்பு இல்லை. தீவிபத்து நடந்த இடத்திற்கு சிறிது துாரத்திலேயே துணை மின்நிலையம் இருந்ததால் பதற்றம் நிலவியது. கடலுார் தாசில்தார் பலராமன் சம்பவ இடத்திற்க்கு வந்து விசாரித்தார். இந்த விபத்தால் மின் விநியோகம் பாதிக்கப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X