பொது செய்தி

இந்தியா

அறுபடைவீடு மருத்துவக் கல்லுாரி எல்.இ.டி. விளக்குகள் வழங்கல்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
பாகூர்-அறுபடை வீடு மருத்துவக் கல்லுாரி சார்பில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான எல்.இ.டி. விளக்குகள், மணவெளி தொகுதிக்கு வழங்கப்பட்டது.மணவெளி தொகுதிக்குட்பட்ட தெருக்களில் உள்ள மின் விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக அரசு சார்பிலும், தனியார் நிறுவனங்களின் சி.எஸ்ஆர். நிதியிலும் அமைக்க சபாநாயகர் செல்வம் நடவடிக்கை எடுத்து வருகிறார்.அதன்படி, கிருமாம்பாக்கம் அறுபடை வீடு மருத்துவக்

பாகூர்-அறுபடை வீடு மருத்துவக் கல்லுாரி சார்பில் ரூ. 3 லட்சம் மதிப்பிலான எல்.இ.டி. விளக்குகள், மணவெளி தொகுதிக்கு வழங்கப்பட்டது.மணவெளி தொகுதிக்குட்பட்ட தெருக்களில் உள்ள மின் விளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக அரசு சார்பிலும், தனியார் நிறுவனங்களின் சி.எஸ்ஆர். நிதியிலும் அமைக்க சபாநாயகர் செல்வம் நடவடிக்கை எடுத்து வருகிறார்.அதன்படி, கிருமாம்பாக்கம் அறுபடை வீடு மருத்துவக் கல்லூரி சார்பில், ரூ. 3 லட்சம் மதிப்பிலான 300 எல்.இ.டி. விளக்குகள் வழங்கப்பட்டன.சேலம் விநாயகா மிஷன் ரிசர்ச் பவுண்டேஷன் சேர்மன் கணேசன் உத்தரவின்பேரில், பவுண்டேஷன் நிர்வாக குழு உறுப்பினர் சுரேஷ் சாமுவேல் மேற்பார்வையில் இந்த விளக்குகள் வழங்கப்பட்டன.சபாநாயகர் செல்வம் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், கல்லுாரி துணைப்பதிவாளர் பெருமாள், மின்துறை அதிகாரிகளிடம் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X