கடலில் குளித்த மாணவர் மாயம்

Added : ஆக 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி-கடலில் குளித்தபோது அலையில் அடித்துச் செல்லப்பட்ட பிளஸ் 1 மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி ராசு உடையார் தோட்டம் பகுதியை சேர்ந்த துரைராஜ், ஜோஸ்பின் தம்பதியின் மகன் பிரவீன், 17. தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று காலை 7.45 மணிக்கு, கால்பந்து கோச்சிங் முடித்த பிரவீன், வீட் டுக்கு செல்லாமல், நண்பர்களுடன் தலைமை செயலகம் எதிரே கடலில்

புதுச்சேரி-கடலில் குளித்தபோது அலையில் அடித்துச் செல்லப்பட்ட பிளஸ் 1 மாணவரை போலீசார் தேடி வருகின்றனர்.புதுச்சேரி ராசு உடையார் தோட்டம் பகுதியை சேர்ந்த துரைராஜ், ஜோஸ்பின் தம்பதியின் மகன் பிரவீன், 17. தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். நேற்று காலை 7.45 மணிக்கு, கால்பந்து கோச்சிங் முடித்த பிரவீன், வீட் டுக்கு செல்லாமல், நண்பர்களுடன் தலைமை செயலகம் எதிரே கடலில் குளித்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அலையில் அடித்துச் செல்லப்பட்டார். இதனைக் கண்ட நண்பர்கள் கூச்சலிட்டனர். அருகில் இருந்தவர்கள் கடலில் இறங்கி பிரவீனை தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. தகவல் அறிந்து வந்த பெரியக்கடை போலீசார், மீனவர்கள் உதவியுடன், கடலில் மூழ்கிய சிறுவனை தேடினர். கடலோர காவல் படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு தேடுதல் பணி நடந்து வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X