அடித்து உதைத்து வீட்டில் பூட்டியதால் மனைவி தீக்குளித்து தற்கொலை முயற்சி

Added : ஆக 20, 2021
Share
Advertisement
திருக்கனுார்-காட்டேரிக்குப்பத்தில், கணவன் அடித்து உதைத்து, வீட்டிற்குள் வைத்து பூட்டியதால், மனைவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழகப் பகுதியான தெளி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன், 33; ஜே.சி.பி., ஆப்பரேட்டர். இவரது மனைவி கனகாதேவி, 27; இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.இவர்கள், கடந்த 3 ஆண்டுகளாக காட்டேரிக்குப்பம் மேட்டுத் தெருவில்

திருக்கனுார்-காட்டேரிக்குப்பத்தில், கணவன் அடித்து உதைத்து, வீட்டிற்குள் வைத்து பூட்டியதால், மனைவி தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழகப் பகுதியான தெளி கிராமத்தை சேர்ந்தவர் நாராயணன், 33; ஜே.சி.பி., ஆப்பரேட்டர். இவரது மனைவி கனகாதேவி, 27; இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.இவர்கள், கடந்த 3 ஆண்டுகளாக காட்டேரிக்குப்பம் மேட்டுத் தெருவில் உள்ள வீட்டில் வாடகைக்கு வசித்து வருகின்றனர்.கடந்த சில நாட்களாக தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நாராயணன், கனகாதேவியை அடித்து துன்புறுத்தி உள்ளார்.நேற்று முன்தினம் ஏற்பட்ட தகராறில், கனகாதேவியை நாராயணன் அடித்ததுடன், வீட்டின் உள்ளே வைத்து பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டார்.இதனால் மனமுடைந்த கனகாதேவி, வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி, தீ வைத்துக் கொண்டார்.இதனைக்கண்ட அக்கம்பக்கத்தினர் கனகாதேவியை மீட்டு, அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து கனகாதேவியின் தந்தை அண்ணாமலை, காட்டேரிக்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார். மனைவியை தற்கொலைக்கு துாண்டியதாக, கணவர் நாராயணன் மீது வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X