பொது செய்தி

இந்தியா

'கேபிள் டிவி' உரிமையாளர்கள் உள்ளாட்சி செயலரிடம் மனு

Added : ஆக 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரி 'கேபிள் டிவி' ஆபரேட்டர்கள், 'செட்டாப் பாக்ஸ்' அடிப்படையில் வரி செலுத்த ஒப்புதல் அளித்து உள்ளாட்சி துறை செயலரிடம் மனு கொடுத்துள்ளனர்.இது குறித்து புதுச்சேரி 'கேபிள் டிவி' உரிமையாளர்கள் நல்வாழ்வு சங்கம் சார்பில், உள்ளாட்சி துறை செயலரிடம் கொடுத்துள்ள மனு;கடந்த 12ம் தேதி 'கேபிள் டிவி' வரிவிதிப்பு சம்பந்தமாக, முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி-புதுச்சேரி 'கேபிள் டிவி' ஆபரேட்டர்கள், 'செட்டாப் பாக்ஸ்' அடிப்படையில் வரி செலுத்த ஒப்புதல் அளித்து உள்ளாட்சி துறை செயலரிடம் மனு கொடுத்துள்ளனர்.இது குறித்து புதுச்சேரி 'கேபிள் டிவி' உரிமையாளர்கள் நல்வாழ்வு சங்கம் சார்பில், உள்ளாட்சி துறை செயலரிடம் கொடுத்துள்ள மனு;கடந்த 12ம் தேதி 'கேபிள் டிவி' வரிவிதிப்பு சம்பந்தமாக, முதல்வர் ரங்கசாமி முன்னிலையில், உள்ளாட்சி துறை செயலர், ஜான்குமார் எம்.எல்.ஏ., மற்றும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பங்கேற்ற கூட்டம் நடந்தது.அக்கூட்டத்தில், பழைய வரிவிதிப்பு முறை இல்லாமல் புதிய வரிவிதிப்பு முறையாக செட்டாப் பாக்ஸ் அடிப்படையில், வரி செலுத்த ஆபரேட்டர்கள் ஒப்புக் கொண்டனர்.அதாவது, ஒரு செட்டாப் பாக்சுக்கு ரூபாய் 7 வீதம், செப்டம்பர் மாதம் முதல் வரி செலுத்த ஆபரேட்டர்கள் ஏற்றுகொண்டனர். இந்த முடிவை, வரும் சட்டசபை கூட்டத் தொடரில் அரசாணையாக வெளியிட ஆவன செய்ய வேண்டும்.நிலுவைத் தொகை சம்பந்தமான வழக்கு கோர்ட்டில் இருப்பதால், நீதிமன்ற தீர்ப்பின்படி செயல்படுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X