சமையல் எண்ணெய் திருட்டு:

Added : ஆக 20, 2021
Share
Advertisement
வில்லியனுார்-டேங்கர் லாரியில் ஏற்றி வந்த சமையல் எண்ணெய்யை திருடி விற்றுவிட்டு, தண்ணீர் கலந்து மோசடியில் ஈடுபட்ட லாரி டிரைவர் மற்றும் கிளீனரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி, வி.மணவெளி தண்டுகரை வீதியில் ஐஸ்வர்யம் சமையல் எண்ணெய் தொழிற்சாலை உள்ளது. கடந்த மாதம் 24ம் தேதி, ஐதராபாத்தில் உள்ள கோல்டன் குளோப் நிறுவனத்தில் ரூ. 42 லட்சம் மதிப்பிலான 29 மெட்ரிக் டன் சமையல்

வில்லியனுார்-டேங்கர் லாரியில் ஏற்றி வந்த சமையல் எண்ணெய்யை திருடி விற்றுவிட்டு, தண்ணீர் கலந்து மோசடியில் ஈடுபட்ட லாரி டிரைவர் மற்றும் கிளீனரை போலீசார் கைது செய்தனர்.புதுச்சேரி, வி.மணவெளி தண்டுகரை வீதியில் ஐஸ்வர்யம் சமையல் எண்ணெய் தொழிற்சாலை உள்ளது. கடந்த மாதம் 24ம் தேதி, ஐதராபாத்தில் உள்ள கோல்டன் குளோப் நிறுவனத்தில் ரூ. 42 லட்சம் மதிப்பிலான 29 மெட்ரிக் டன் சமையல் எண்ணெய் கொள்முதல் செய்தனர்.சென்னையை சேர்ந்த குளோபல் டிரான்ஸ்போர்ட்டை சேர்ந்த லாரியில் எண்ணெய் ஏற்றி, புதுச்சேரிக்கு அனுப்பி வைத்தனர்.லாரியை, செங்கோட்டையை சேர்ந்த டிரைவர் கருப்பசாமி(30) ஓட்டி வந்தார். கிளீனர் பாலசுப்ரமணியன் (22)உடன் வந்தார். குறிப்பிட்ட நாளுக்குள் லாரி புதுச்சேரி வந்து சேரவில்லை.விசாரித்ததில், அந்த லாரி சென்னை மாதவரம் பைபாசில் அனாதையாக நிற்பது தெரிய வந்தது. மாற்று டிரைவர் மூலம் வி,மணவெளிக்கு லாரியை கொண்டு வந்தனர். டேங்கரை பரிசோதித்ததில், 4 மெட்ரிக் டன் எண்ணெய் குறைவாக இருந்தது. எண்ணெய்யில் தண்ணீர் ஊற்றி கலப்படம் செய்திருந்தனர்.இது குறித்து, ஐஸ்வர்யம் நிறுவன மேலாளர் கேசவய்யா,(30) வில்லியனுார் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து, டிரைவர் மற்றும் கிளீனரை தேடி வந்தனர்.இந்நிலையில், நேற்று முன்தினம் திருநெல்வேலி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் மாமியார் வீட்டில் பதுங்கி இருந்த டிரைவர் கருப்பசாமி, கிளீனர் பாலசுப்ரமணியன் ஆகிய இருவரையும் வில்லியனுார் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், இருவரும் கூறியிருப்பதாவது:ஐதராபாத்தில் இருந்து வரும் வழியில், சாப்பிடுவதற்காக லாரியை நிறுத்தினோம். டேங்கரில் இருந்த எண்ணெய்யை எடுத்து, ஓட்டலுக்கு ரூ.10 ஆயிரத்திற்கு விற்றோம். அதேபோல, மேலும் இருடங்களில் ரூ. 6 லட்சத்திற்கு எண்ணெய் விற்பனை செய்தோம். அவர்கள் கொடுத்த ஐடியாவால், டேங்கரில் இருந்த எண்ணெய்யில் தண்ணீரை கலந்து விட்டோம்' என தெரிவித்தனர். கொரோனா பரிசோதனைக்கு பிறகு, இருவரை யும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X