பொது செய்தி

இந்தியா

அரசு மருத்துவக் கல்லுாரியில் 23 முதல் புறநோயாளிகள் சேவை

Added : ஆக 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி-அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை நிறுத்தப்பட்டு, 23ம் தேதி முதல் புறநோயாளிகள் சிகிச்சை மீண்டும் துவக்கப்படுகிறது. கோரிமேடு நெஞ்சக நோய் மருத்துவமனை, கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்படுகிறது.புதுச்சேரி மாநிலம் முழுதும் தற்போதைய நிலையில், கொரோனா தொற்றினால் மருத்துவமனையில் 172 பேர், வீடுகளில் 799 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுச்சேரி-அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், கொரோனா சிகிச்சை நிறுத்தப்பட்டு, 23ம் தேதி முதல் புறநோயாளிகள் சிகிச்சை மீண்டும் துவக்கப்படுகிறது. கோரிமேடு நெஞ்சக நோய் மருத்துவமனை, கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்படுகிறது.புதுச்சேரி மாநிலம் முழுதும் தற்போதைய நிலையில், கொரோனா தொற்றினால் மருத்துவமனையில் 172 பேர், வீடுகளில் 799 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். புதுச்சேரி பிராந்தியத்தில் 96 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது. அதனால், கொரோனா மருத்துவமனையாக உள்ள இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மீண்டும் சிகிச்சைகளை துவக்க சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.இந்த மருத்துவமனை, கடந்தாண்டு மார்ச் மாதம் கொரோனா தொற்று பரவல் துவங்கியது முதல், கொரோனா மருத்துவமனையாக மாற்றப்பட்டது. இதனால் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக எம்.பி.பி.எஸ்., மாணவர்கள் மருத்துவக் கல்வியை தொடர முடியாத சூழல் உள்ளது.ஆன்-லைன் வகுப்புகள் மட்டுமே நடந்து வருகிறது. பயிற்சி இல்லாமல் உள்ளனர். எனவே, மருத்துவ மாணவர்களின் கல்விக்காக, அரசு மருத்துவ கல்லுாரியை செயல்படுத்த சுகாதாரத் துறை முடிவு செய்துள்ளது.அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்கு அட்மிஷன் நிறுத்தப்பட்டு, கோரிமேடு நெஞ்சக நோய் மருத்துவமனையில் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். முக்கிய மருத்துவ உபகரணங்களும் அந்த மருத்துவமனைக்கு இட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்தால், அருகில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லுாரி மற்றும் தனியார் மருத்துவமனைகளை முழுமையாக பயன்படுத்த திட்டமிடப் பட்டுள்ளது.மாற்று ஏற்பாடு என்னசுகாதாரத் துறை இயக்குனர் ஸ்ரீராமுலு கூறியதாவது:கோரிமேடு நெஞ்சக நோய் மருத்துவமனையில் 160 படுக்கைகள் உள்ளன. எனவே, அரசு மருத்துவ கல்லுாரி கொரோனா சிகிச்சை மையமாக இருப்பதை கைவிட முடிவு செய்துள்ளோம்.இனி, புதுச்சேரி பிராந்தியத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோருக்கு, கோரிமேடு நெஞ்சக நோய் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளோம். இதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து வருகிறது.ஆபத்தான கொரோனா நோயாளிகள், கொரோனா தொற்றுள்ள கர்ப்பிணிகள், குழந்தைகள், சிறுவர்கள் இனி ஜிப்மரில் அனுமதிக்கப்படுவர். ஜிப்மர் நிர்வாகத்துடன் முதல்வர் நடத்திய பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், 23ம் தேதி முதல் புறநோயாளிகள் சேவை மீண்டும் துவக்கப்படுகிறது. தொடர்ந்து, படிப்படியாக அனைத்து மருத்துவ சேவைகளும் துவங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X