பொது செய்தி

இந்தியா

கல்லுாரி மாணவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி

Added : ஆக 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி-கல்லுாரி இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான இலவச திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கீழ் இயங்கும் தேசிய வாழ்வாதார சேவை மையம் மூலம் திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இதில்,

புதுச்சேரி-கல்லுாரி இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான இலவச திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கீழ் இயங்கும் தேசிய வாழ்வாதார சேவை மையம் மூலம் திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.இதில், ஆதிதிராவிடர், பழங்குடியின இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற ஏதுவாக, தனியார் நிறுவனங்கள் மூலம் ஊக்கத்தொகையுடன் பயிற்சி அளிக்கப்படுகிறது.புதுச்சேரியில் அரசு அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளில் கடந்தாண்டு படித்து முடித்த, தற்போது இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கு, டாடா கன்சல்டன்சி சேவை நிறுவனம் மூலம் இலவச திறன் பயிற்சி வழங்கப்பட உள்ளது. பயிற்சி முடிக்கும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.தற்போது, கொரோனா பரவல் காரணமாக, இணை யதளம் மூலம், பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினமும் 2 மணி நேரம் வீதம், 40 முதல் 45 நாட்களுக்கு பயிற்சி வகுப்பு நடைபெறும்.இப்பயிற்சி வகுப்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 40 சதவீதம் பேர் இடம்பெறுவர்.ஆண்டு வருமானம் ரூ. 6 லட்சத்திற்கு குறைவாக உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினர் 60 சதவீதம் இடம் பெறுவர்.விருப்பம் உள்ள மாணவர்கள், தங்கள் கல்லுாரியில் விண்ணப்பித்திட வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X