பொது செய்தி

இந்தியா

2,000 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தெலுங்கானாவில் இருந்து வருகை

Added : ஆக 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி-உள்ளாட்சித் தேர்தலையொட்டி, தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 2,000 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் புதுச்சேரிக்கு கொண்டுவரப்பட்டுள்ளன .புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடு களை மாநிலத் தேர்தல் ஆணையம் முடுக்கிவிட் டுள்ளது.இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்காக தெலுங்கானா மாநிலத்தில் இருந்து, 2 ஆயிரம் மின்னணு ஓட்டுப்பதிவு

புதுச்சேரி-உள்ளாட்சித் தேர்தலையொட்டி, தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 2,000 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் புதுச்சேரிக்கு கொண்டுவரப்பட்டுள்ளன .புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடு களை மாநிலத் தேர்தல் ஆணையம் முடுக்கிவிட் டுள்ளது.இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்காக தெலுங்கானா மாநிலத்தில் இருந்து, 2 ஆயிரம் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் நேற்று இரண்டு கண்டெய்னர் லாரிகளில் புதுச்சேரிக்கு கொண்டு வரப்பட்டன.அவை, பாரதிதாசன் மகளிர் கல்லுாரிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன. மாவட்ட கலெக்டர் ரிஷிதா குப்தா, சப் கலெக்டர்கள் கந்தசாமி, முரளிதரன், அரசியல் கட்சியினர் முன்னிலையில், பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு, சீல் வைக்கப்பட்டது.அந்த அறைக்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டது. மேலும், சி.சி.டி.வி., கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.உள்ளாட்சித் தேர்தலுக்கு 5 ஆயிரம் மின்னணு ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் தேவைப்படும் என மாநில தேர்தல் ஆணையம் மதிப்பிட்டுள்ளது.மாநில தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் ஏற்கனவே 1,200 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ளன.அவை அரசியல் கட்சியினர் முன்னிலையில், முதற்கட்ட பரிசோதனை கடந்த இரண்டு வாரமாக நடந்து வந்தது. நேற்றுடன் முதற்கட்ட பரிசோதனை முடிந்தது.தற்போது தெலுங்கானாவில் இருந்து 2000 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வந்துள்ளன. மீதமுள்ள 1800 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பெங்களூருவில் இருந்து அடுத்த வாரம் கொண்டுவர மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X