பொது செய்தி

இந்தியா

கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை

Added : ஆக 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி-கருவடிக்குப்பம் பிள்ளையார் கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும் என, இந்திய கம்யூ., வலியுறுத்தி உள்ளது.இந்திய.கம்யூ., நிர்வாகிகள், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனிடம் அளித்துள்ள மனு:உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட கருவடிக்குப்பத்தில், மிகத் தொன்மையான பிள்ளையார் கோவில் குளம் நெஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த குளம், நிலத்தடி நீர் சேகரிப்புக்கு

புதுச்சேரி-கருவடிக்குப்பம் பிள்ளையார் கோவில் குளத்தை சீரமைக்க வேண்டும் என, இந்திய கம்யூ., வலியுறுத்தி உள்ளது.இந்திய.கம்யூ., நிர்வாகிகள், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணனிடம் அளித்துள்ள மனு:உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட கருவடிக்குப்பத்தில், மிகத் தொன்மையான பிள்ளையார் கோவில் குளம் நெஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த குளம், நிலத்தடி நீர் சேகரிப்புக்கு ஆதாரமாக உள்ளது.தற்போது சிலர் இந்த குளத்தின் நீர் வழி ஆதாரங்களை நிரந்தரமாக மூடி, சிமென்ட் கான்கிரீட் கழிவுகளை குளத்தில் கொட்டி துார்த்து வருகின்றனர்.குளத்தை பாதுகாக்க, சாலை ஓரம் உள்ள சிமென்ட் சுவரை உயர்த்தி கட்டி, சுற்றிலும் படிக்கட்டுகள் அமைத்து பயன்பாட்டிற்கு விட வேண்டும்.குளத்திற்கு நீர் வரும் பாதைகளை சீரமைத்து, குளத்தை சுற்றி மரக்கன்றுகள் நட வேண்டும். நடைபயிற்சிக்கான பாதை அமைக்க வேண்டும்.கருவடிகுப்பத்தில் சாலைகள் அனைத்தும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன. இவற்றை செப்பனிட நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X