இந்தியா

நடவடிக்கை : தகுதியற்ற ரேஷன் கார்டுகளை நீக்கிட...வீடு வீடாக சென்று ஆய்வு செய்ய முடிவு

Added : ஆக 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி-ரேஷன் கார்டுகளின் உண்மைத் தன்மையை கண்டறிய, வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்திட அரசு அதிரடி முடிவு செய்துள்ளது.புதுச்சேரி அரசு, குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்பில், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு சிவப்பு நிறத்திலும், மற்றவர்களுக்கு மஞ்சள் நிறத்திலும் ரேஷன் கார்டு வழங்கி வருகிறது.தற்போது, மொத்தம் 3 லட்சத்து 44 ஆயிரத்து 701 ரேஷன் கார்டுகள்
 நடவடிக்கை : தகுதியற்ற ரேஷன் கார்டுகளை நீக்கிட...வீடு வீடாக சென்று ஆய்வு செய்ய முடிவு

புதுச்சேரி-ரேஷன் கார்டுகளின் உண்மைத் தன்மையை கண்டறிய, வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்திட அரசு அதிரடி முடிவு செய்துள்ளது.

புதுச்சேரி அரசு, குடிமைப்பொருள் வழங்கல் துறை சார்பில், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு சிவப்பு நிறத்திலும், மற்றவர்களுக்கு மஞ்சள் நிறத்திலும் ரேஷன் கார்டு வழங்கி வருகிறது.தற்போது, மொத்தம் 3 லட்சத்து 44 ஆயிரத்து 701 ரேஷன் கார்டுகள் நடைமுறையில் உள்ளன. இதில், பாதிக்கும் மேற்பட்ட கார்டுகள் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கான சிவப்பு நிற ரேஷன் கார்டுகளாகவே உள்ளன.அரசின் நலத்திட்ட உதவிகள், பொருளாதார அடிப்படையில் வழங்கப்படுகிறது. இதற்கு ஆதாரமாக, ரேஷன் கார்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.இதனால், வசதி படைத்தவர்கள் பலர் அரசின் நலத்திட்டங்களை பெற்றிட, குடும்ப வருமானத்தை குறைத்து கூறி, சிவப்பு நிற ரேஷன் கார்டுகளை பெற்று வருகின்றனர். அதன் மூலம், அரசின் சலுகைகளை அனுபவிக்கின்றனர்.அதேநேரத்தில், உண்மையாகவே வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் சிவப்பு நிற ரேஷன் கார்டு கிடைக்காமல், மஞ்சள் நிற கார்டு வைத்துள்ளதால், அரசின் நலத்திட்டங்களை பெற முடியாமல் தவித்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த ஆட்சியில் ரேஷன் கார்டிற்கு இலவச அரிசி வழங்குவதில் முறைகேடு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.அதனையொட்டி, அப்போதைய கவர்னரின் அதிரடி உத்தரவால், கடந்த 2017ம் ஆண்டு முதல், ரேஷன் கார்டுகளுக்கு அரிசி வழங்காமல், அதற்கான பணத்தை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.இதனால், மாநிலத்தில் நடைமுறையில் இருந்த 501 ரேஷன் கடைகளும் மூடப்பட்டுள்ளன. தற்போதைய அரசு மீண்டும் ரேஷன் கடைகளை திறந்து, மக்களுக்கு நேரடியாக அரிசி வழங்கிட ஆர்வம் காட்டி வருகிறது.மேலும், தற்போது நடைமுறையில் உள்ள சிவப்பு ரேஷன் கார்டுகளின் உண்மைத்தன்மையை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதில், வீடு, வீடாக சென்று கணக்கெடுப்பு நடத்தி, தகுதியற்ற கார்டுகளை நீக்கம் செய்திட குடிமைப்பொருள் வழங்கல் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இருமுறை ஒத்தி வைக்கப்பட்ட இப்பணி, விரைவில் நடத்தப்பட உள்ளது.அதேபோன்று, ரேஷன் கார்டுகளில் முகவரி திருத்தம், பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கல் செய்ய முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

இதனை தவிர்த்திட, தொகுதிதோறும் சிறப்பு முகாம் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதன்படி வரும், 23 மற்றும் 24ம் தேதிகளில் ஊசுடு தொகுதியில், ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் செய்வதற்கான சிறப்பு முகம் நடத்தப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X