பொது செய்தி

இந்தியா

ஆசிரியர் பட்டயப்படிப்பு சேர்க்ைக

Added : ஆக 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி-மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் இரண்டு ஆண்டு பட்டயப் படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.இது குறித்து புதுச்சேரி ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில், 2021-22ம் கல்வி ஆண்டில், இரண்டு ஆண்டு ஆசிரியர் பட்டயப் படிப்பு சேர்க்கைக்கு,

புதுச்சேரி-மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் இரண்டு ஆண்டு பட்டயப் படிப்பு சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.இது குறித்து புதுச்சேரி ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:புதுச்சேரி மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில், 2021-22ம் கல்வி ஆண்டில், இரண்டு ஆண்டு ஆசிரியர் பட்டயப் படிப்பு சேர்க்கைக்கு, புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம்.இதில் சேர்வதற்கு மேல்நிலைப் பள்ளி தேர்வு அல்லது அதற்கு சமமான தேர்வில், குறைந்தபட்சம் 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.அட்டவணை இனத்தவர், எம்.பி.சி., மற்றும் பி.சி., பிரிவினர் குறைந்தபட்சம் 45 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.விண்ணப்பங்கள், வரும் 31ம் தேதி வரை, அலுவலக நாட்களில், லாஸ்பேட்டையில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் கிடைக்கும். https://schooledn.py.gov.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, வரும் 31ம் தேதி மாலை 5:00 மணிக்குள் மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.விண்ணப்பத்தை பதிவேற்றம் செய்ய விரும்புவோர், https://forms.gle/Dj6r1eKkaHXB8zoC7 என்ற இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்யலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X