பொது செய்தி

இந்தியா

ஓவியக் கண்காட்சி

Added : ஆக 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி-ஆரோதன் கலைக் கூடத்தில், ஓவியக் கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.கொரோனாவில் பாதிக்கப்பட்ட ஓவியர்களின் வாழ்வை புதுப்பித்திட, புதுச்சேரி குருசுகுப்பத்தில் இயங்கி வரும் ஆரோதன் கலைக்கூடம், ஒரு மாத காலத்திற்கு ஓவிய கண்காட்சியை அமைத்துள்ளது.இக்கண்காட்சி, கடந்த 15ம் தேதி துவங்கியது. இந்நிகழ்ச்சியில், கலைக்கூட தலைவர் லலித்வர்மா வரவேற்றார்.

புதுச்சேரி-ஆரோதன் கலைக் கூடத்தில், ஓவியக் கண்காட்சியை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.கொரோனாவில் பாதிக்கப்பட்ட ஓவியர்களின் வாழ்வை புதுப்பித்திட, புதுச்சேரி குருசுகுப்பத்தில் இயங்கி வரும் ஆரோதன் கலைக்கூடம், ஒரு மாத காலத்திற்கு ஓவிய கண்காட்சியை அமைத்துள்ளது.இக்கண்காட்சி, கடந்த 15ம் தேதி துவங்கியது. இந்நிகழ்ச்சியில், கலைக்கூட தலைவர் லலித்வர்மா வரவேற்றார். அசிஸ்ட் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் நிறுவனர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். முதல்வர் ரங்கசாமி, ஓவிய கண்காட்சியை துவக்கி வைத்தார். ஓவியர்கள் முனுசாமி, சக்தி, சுகுமாரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.கண்காட்சியில், நாட்டின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், புதுச்சேரியை சேர்ந்த 75 ஓவியர்களின் படைப்புகள் இடம் பெற்றுள்ளன. அரவிந்தரின் 150வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில், உலகளாவிய 150 ஓவியர்களின் படைப்புகள் வைக்கப்பட்டுள்ளன.இந்த ஓவியக் கண்காட்சி, வரும் செப்டம்பர் 15ம் தேதி வரை நடக்கிறது. தினசரி காலை 10:00 மணி முதல் பகல் 1:00 வரை, மாலை 3:00 மணி முதல் இரவு 7:00 வரை பொதுமக்கள் பார்வையிடலாம். அனுமதி இலவசம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X