பொது செய்தி

இந்தியா

படப்பிடிப்பு கட்டணம் குறைக்க ரங்கசாமியிடம் நடிகர் கோரிக்கை

Added : ஆக 20, 2021
Share
Advertisement
புதுச்சேரி-புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்க வேண்டும் என, முதல்வர் ரங்கசாமியிடம் நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை விடுத்தார்.புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில், சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளை 100 பேர் பங்கேற்புடன் நடத்தலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது.இதையடுத்து, புதுச்சேரியில் பல்வேறு சினிமா மற்றும்

புதுச்சேரி-புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்க வேண்டும் என, முதல்வர் ரங்கசாமியிடம் நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை விடுத்தார்.புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்துள்ள நிலையில், சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளை 100 பேர் பங்கேற்புடன் நடத்தலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது.இதையடுத்து, புதுச்சேரியில் பல்வேறு சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் அரசின் வழிகாட்டுதலின் படி நடந்து வருகிறது.புதுச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டோர் நடிக்கும் 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது.இந்நிலையில், நடிகர் விஜய் சேதுபதி, முதல்வர் ரங்கசாமியை, திலாஸ்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் நேற்றிரவு சந்தித்து பேசினார்.அப்போது முதல்வரிடம், 'புதுச்சேரியில் சினிமா படப்பிடிப்புக்கு ஒரு நாளைக்கு கட்டணமாக ரூ.5 ஆயிரம் வசூலிக்கப்பட்டு வந்தது. தற்போது நாள் ஒன்றுக்கு ரூ.28 ஆயிரமாக உயர்த்தப் பட்டுள்ளது.இதனால் சிறிய பட்ஜெட்டில் படம் தயாரிக்கும் நிறுவனங்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, சினிமா படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, நடிகர் விஜய் சேதுபதி கோரிக்கை விடுத்தார்.இதுகுறித்து பரிசீலிப்பதாக, முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X