கல்வியியல் கல்லுாரியில் சான்றிதழ் வழங்கும் விழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கல்வியியல் கல்லுாரியில் சான்றிதழ் வழங்கும் விழா

Added : ஆக 20, 2021
Share
செஞ்சி-ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி பி.எஸ்சி., பி.எட்., முதல் பிரிவு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.மூன்றாண்டு பட்டப் படிப்பு படித்த பின் இரண்டாண்டு பி.எட்., என ஆசிரியர் படிப்பிற்கு ஐந்தாண்டு என்ற நிலையை தமிழக அரசு கடந்த 2016ம் ஆண்டு மாற்றியமைத்து நான்கு ஆண்டு படிப்பாக பி.எஸ்சி., பி.எட்., பட்டப்படிப்பை அறிமுகம் செய்தது. ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கலை, அறிவியல்

செஞ்சி-ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி பி.எஸ்சி., பி.எட்., முதல் பிரிவு மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.மூன்றாண்டு பட்டப் படிப்பு படித்த பின் இரண்டாண்டு பி.எட்., என ஆசிரியர் படிப்பிற்கு ஐந்தாண்டு என்ற நிலையை தமிழக அரசு கடந்த 2016ம் ஆண்டு மாற்றியமைத்து நான்கு ஆண்டு படிப்பாக பி.எஸ்சி., பி.எட்., பட்டப்படிப்பை அறிமுகம் செய்தது. ஆலம்பூண்டி ஸ்ரீரங்கபூபதி கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லுாரியில் அதே ஆண்டில் பி.எஸ்சி., பி.எட்., பட்டப்படிப்பு துவங்கப்பட்டது. இதில் முதல் பிரிவு மாணவர்கள் கடந்த ஆண்டு இறுதித் தேர்வில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நேற்று நடந்தது. கல்லுாரி சேர்மன் ரங்கபூபதி தலைமை தாங்கினார். செயலாளர் ஸ்ரீபதி முன்னிலை வகித்தார். முதல்வர் சசிகுமார் வரவேற்றார். செஞ்சி தமிழ்ச் சங்கத் தலைவர் கவிதாஸ் வாழ்த்திப் பேசினார்.முதல்வர் கோவிந்தராஜ், பேராசிரியர்கள் நந்தாபாய், சரவணபவன், பார்வதி உட்பட பலர் பங்கேற்றனர். ரங்க சின்னம்மாள் பி.எட்., கல்லுாரி முதல்வர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X