கிரைம் செய்திகள்...

Added : ஆக 20, 2021
Share
Advertisement
சாராயம் விற்றவர் கைதுதிருவெண்ணெய்நல்லுார்: மழவராயநல்லுார் கிராமமத்தில் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சாராயம் விற்ற அதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் காளிதாஸ், 36; என்பவரை கைது செய்து, 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.மாமூல் கேட்டு கடை சூறைதிண்டிவனம்: திண்டிவனத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார், 47; இவர்

சாராயம் விற்றவர் கைதுதிருவெண்ணெய்நல்லுார்: மழவராயநல்லுார் கிராமமத்தில் சப் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அப்பகுதியில் சாராயம் விற்ற அதே ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் காளிதாஸ், 36; என்பவரை கைது செய்து, 10 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.மாமூல் கேட்டு கடை சூறைதிண்டிவனம்: திண்டிவனத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார், 47; இவர் திருவள்ளுவர் தெருவில் சவுண்டு சர்வீஸ் கடை வைத்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு, நபிகள் நாயகம் தெருவைச் சேர்ந்த சலீம் மகன் காதர்பாஷா, 28; என்பவர், கடைக்கு வந்து மாமூல் கேட்டுள்ளார். தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அவர், கடையில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து, கடை உரிமையாளர் விஜயக்குமார், கடையில் பணிபுரியும் சரத்குமார், 30; மற்றும் காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், 30; ஆகியோரை தாக்கினார்.காயமடைந்த சரத்குமார், ராஜேந்திரன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சரத்குமார் கொடுத்த புகாரின் பேரில், திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிந்து காதர் பாஷாவை கைது செய்தனர்.பேத்தி மாயம்: தாத்தா புகார்திருவெண்ணெய்நல்லுார்: செம்மார் கிராமத்தைச் சேர்ந்த திருவேங்கடம் மகள் பாக்கியவதி, 22; பி.எஸ்சி., பட்டதாரி. இவருக்கு பெற்றோர்கள் திருமணம் நிச்சயித்து வரும் 27ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் முதல் பாக்கியவதியைக் காணவில்லை. இது குறித்து அவரது தாத்தா கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.கழிவுநீரால் தகராறு: 4 பேர் மீது வழக்குதிருவெண்ணெய்நல்லுார்: மணக்குப்பம், புதுகாலனியைச் சேர்ந்தவர் செந்தில், 35; இவரது வீட்டு கழிவுநீர் பக்கத்தில் உள்ள தங்கராசு வீட்டின் முன் ஓடியது. இதனால் செந்தில், தங்கராசு ஆகிய இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், தங்கராசு மற்றும் அவரது உறவினர்கள் செந்தில்குமார், கணேசமூர்த்தி, சந்தோஷ்குமார் ஆகியோர் சேர்ந்து செந்திலைத் தாக்கினர். புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் தங்கராசு, செந்தில்குமார், கணேசமூர்த்தி, சந்தோஷ்குமார் ஆகிய 4 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.கணவர் மாயம்: மனைவி புகார்தியாகதுருகம்: பிரிதிவிமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை மகன் முருகன், 38; இவரது மனைவி கொளஞ்சி, 40; முருகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததை அறிந்த கொளஞ்சி அவருடன் தகராறு செய்துள்ளார்.இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 13ம் தேதி கேரளா செல்வதாக கூறிச் சென்ற முருகன் குறித்து எந்த தகவலும் வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. கொளஞ்சி அளித்த புகாரின்படி, தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.பெண் கடத்தல்: டிரைவர் மீது வழக்குவிழுப்புரம்: முண்டியம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கஜேந்திரன் மகள் நவமித்ரா, 20; நர்சிங் படித்துள்ளார். இவர், நன்னாட்டாம்பாளையத்தில் உள்ள தனது மாமா வேலு, வீட்டில் தங்கியிருந்தார். இவரை கடந்த 18ம் தேதி முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இவரை பொய்யப்பாக்கத்தைச் சேர்ந்த கார் டிரைவர் ராஜி, 26; என்பவர் கடத்தி சென்றதாக அளித்த புகாரின் பேரில், வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.பெண்கள் மாயம்: போலீஸ் விசாரணைவிழுப்புரம்: செல்லங்குப்பத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் மகள் சூர்யா, 23; கோயம்புத்துார் தனியார் நுால் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். கடந்த 14ம் தேதி வீட்டிலிருந்து கம்பெனிக்கு செல்வதாக கூறிச் சென்றவர் கோயம்புத்துார் செல்லவில்லை. வீட்டிற்கும் வரவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.மற்றொரு வழக்கு: கலிஞ்சிகுப்பத்தைச் சேர்ந்தவர் விஜி மனைவி எழில்வாணி, 27; இவர், கடந்த 12ம் தேதி கணவருடன் ஏற்பட்ட தகராறில் வீட்டிலிருந்து மொபட்டில் சென்றவர் வீடு திரும்பவில்லை. புகாரின்பேரில், வளவனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.மரத்தில் மொபட் மோதி பெண் பலிவிழுப்புரம்: விழுப்புரம் அடுத்த டட்நகர் பாளையத்தைச் சேர்ந்தவர் ஜோசப் சூசையப்பர் மனைவி விக்டோரியா, 55; இவர், நேற்று மதியம் தனது மகன் மல்கிசதேக், 28; என்பவருடன், மொபட்டில் விழுப்புரம் நோக்கி வந்தார். ஆசாரங்குப்பம் பாலம் அருகே வந்தபோது மொபட் நிலை தடுமாறி சாலையோர புளிய மரத்தின் மீது மோதியது. இதில், விக்டோரியா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். காயமடைந்த மல்கிசதேக் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X